• உரைப்பாயிரம்
  • உரைப்பாயிரம் 2
  • உரைப்பாயிரம்3
  • கடவுள் வாழ்த்து பாயிறம்
navigate_next
அறம்

காரணம் வகையும் இலக்கண வகையும்



ஒருவர் உங்களிடம் வந்து அருகில் உள்ள வீட்டின் முகவரியை கேட்கும்போது அதை சுட்டிக் காண்பிக்க முடியும் ஆனால் அதிக தூரத்தில் இருந்தால் வழியைத்தான் காண்பிக்க முடியுமே தவிர சுட்டிக் காட்ட இயலாது இதுவே காரணம் வைக்கும் இலக்கண வைக்கும் உள்ள வேறுபாடு.

அறம்

அறத்தான் வருவதே இன்பம்மற் றெல்லாம்
புறத்த புகழும் இல (குறள் 39)

உலகில் உள்ள நல்லன எல்லாம் புண்ணியமெல்லாம் ஞானமெல்லாம் ‘அறம்’. எச்செயலெவரானும் பாராட்டப் பெறுகின்றதோ அது அறமாகும். “விலக்கத்தக்கது ஒன்றும், உலகத்துப் பலராலும் பாராட்டப் பெறுமாயின் அறமாகலாம்” என்கிறது சுக்கிர நீதி. (அத் 5.சு35)

தமிழில் ‘அறம்’ வடமொழியில் தர்மம் என்ற இரண்டு சொற்களும் ஒரே பொருள் உடையனவாக இருந்த போதிலும் அவற்றின் தன்மை, வேறுபாடு உடையனவாகும். ‘தர்மம்’ என்ற சொல் ‘புருஷ தர்மம்’ ‘பத்தினி தர்மம்’ என்று பலவாறு வரையறுக்கப்பட்ட சில நியதிகளுக்குக் கட்டுப்பட்டது.’ அறம்’ என்ற சொல், விரிந்து பரந்து அதே சமயத்தில் ஆழ்ந்த கருவையும் தன்னிடத்தை நிலைபெறச் செய்வதாகும்.

"மனத்துக்கண் மாசிலனாதலே" அறம் என்ற வள்ளுவர் அறத்தை இல்லறம், துறவறம் என்று இருபெரும் கூறுகளாக்கினார். கவிச்சக்கரவர்த்தி கம்பனோ, வில்லறம், சொல்லறம் என்றும் அறக்கூறுகளை அதிகமாக்கினார். இத்தகைய சிந்தனைகள் இடைக்கால இலக்கியங்களில் பரவலாக வலியுறுத்தப்பட்டுள்ளதை ஈண்டுக் காண்போம்.

இடைக்கால இலக்கியம்

இடைக்கால இலக்கியம் பக்தி இலக்கியங்கள், சிற்றிலக்கியங்கள் என்ற இருபெரும் பகுப்புக்களை உள்ளடக்கியதாகும். மூவர் தேவாரம், மாணிக்க வாசகர் பாடல்கள் ஆகியவை சைவத்திருமுறைகள். ஆண்டாள், தொண்டரடிப்பொடி ஆழ்வார், குலசேகர ஆழ்வார் ஆகியோர் பாடல்கள் நாலாயிரதிவ்வியப் பிரபந்தத்தைச் சேர்ந்த வைணவ இலக்கியங்கள் . சைவ வைணவ சமயங்களைச் சேர்ந்த இவை அனைத்தும் பக்தி இலக்கியங்கள்` என்ற பகுப்பில் அடங்குபவை. தூது, உலா, பிள்ளைத்தமிழ், பரணி,கலம்பகம், அந்தாதி ஆகிய ஆறும் சிற்றிலக்கிய வகைகளாகும்.

"என் கடன் பணி செய்து கிடப்பதே" "யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்" என்று திருத்தொண்டர்கள் மூலம் பொதுத் தொண்டை வலியுறுத்தும் பக்தி இலக்கியங்கள் முழுமையிலும் `தானம், தவம், துறவு, ஞானம், இன்னா செய்யாமை, அன்பு, ஒப்புரவு, நடுவு நிலைமை போன்ற அறவியல் கோட்பாடுகள் பெரிதும் காணப்படுகின்றன.

நாளைய துன்பத்திற்கு அஞ்சி, இன்றைய இன்பத்தைக் கைவிட்டுப் `பசி வந்தால் பத்தும் பறந்து போகும்` நிலையில் உள்ளவர்கட்கு அறம் விளங்காது.

அறத்தோடு வாழவும், அதை வாழ்க்கைக்கு ஏற்றவகையில் விளங்க வைக்கவும் சான்றோர் சிலரால்தான் முடியும். உண்மையே அறம்; அதனால்தான் "அறம் ஒன்றே தரும் மெய்யின்பம்" என்றனர் ஆன்றோர். பாரதிகூட,

"அறம்ஒன் றேதரும்
மெய்யின்பம்; என்றநல்
அறிஞர் தம்மை அனுதினம் போற்றுவேன்!"

என்று பாடினார்.

அபிராமி பட்டர் சுட்டும் அறங்கள்


"மணியே, மணியில் ஒளிவிடும் ஒளியே, ஒளியினை உடைய மணிகளால் அலங்கரிக்கப்பட்ட அணிகலனே, அணியப்படும் அணிகலனுக்கு அழகே" என்று அபிராமியைப் பணிந்து வணங்கும் பட்டர், சிவபெருமான் அளித்த இருநாழிநெல்லினைக், கொண்டு, வேளாளர் முதலியவர்களால் பயிர் செய்வித்து நாட்டின் வளத்தைப் பெருக்கி அதன் வாயிலாக முப்பத்திரண்டு அறங்களைச் செய்து உயிர்களைப் பிழைக்கச் செய்தவளும் காமாட்சியம்மை என்று போற்றுகின்றார்.


அவர் குறிப்பிடும் அறங்கள் மொத்தம் முப்பத்திரண்டு ஆகும். அவையாவன:
ஆதுலர்க்குச்சாலை (ஆதுலர்- வறுமையாளர்); ஓதுவார்க்குணவு; அறுசமயத்தார்க்குண்டி; பசுவுக்கு வாயுறை (வாயுறை புல், வைக்கோல் முதலியன); சிறைச் சோறு; ஐயம்(பிச்சை); தின்பண்டம் நல்கல்; அறவைச் சோறு (அநாதைகளுக்குச் சோறிடுதல்); மகப்பெறுவித்தல், மகவு வளர்த்தல்; மகப்பால் வார்த்தல்; அறவைப் பிணஞ்சுடுதல்; அறவைத் தூரியம் (தூரியம்-நல்லாடை அளித்தல்) சுண்ணம்; நோய்க்கு மருந்து; வண்ணார்; நாதவிதர்; கண்ணாடி; காதோலை; கண்மருந்து; தலைக்கெண்ணெய்; பெண் போகம்; பிறர் துழர் காத்தல்; தண்ணீர்ப் பந்தல்; மடல்; தடம்; சோலை; ஆவுறிஞ்சுத்தறி (பசுக்கள் முதலியவற்றிற்கு உடம்பு அரிக்கும்போது தேய்த்துக் கொள்வதற்காகக் கட்டைகளை நட்டு வைத்தல்) விலங்கிற்குணவு; ஏறு விடுத்தல்; விலை கொடுத்துயிர்காத்தல். பறவை (முதலியவற்றைக் கொன்று உண்பதற்காக விற்கப்படும்போது அவற்றின் விலையைக்கொடுத்து விட்டு உயிரைக் காப்பாற்றுதல்) கன்னி காதானம் என்பனவாகும்.

அறம் உரைத்தல்

பொய் ஒழுக்கத்தை மேற்கொண்டு, மனதெளிவு இன்றி, மயங்கிக் கள் போதை, சூது, தீய நட்பு போன்றவற்றால் நாளும் அழிந்துவரும் மக்களைப் பொய்மை, திருட்டு, புறங்கூறல் போன்ற தீய செயல்களிலிருந்தும் மீட்டு, நல்வழிப்படுத்த ஆன்றோர்கள் மெய்யறிந்த சான்றோர்கள் கூறிய அறிவுரைகளே அறவுரைகளாகும். நல்லன செய்ய நல்வழிப்படுத்தத் தோன்றிய அறங்களை மறவாது போற்றலும், காத்தலும் இன்றியமையாதனவாகும்.

அறம் ஒன்றே தரும் மெய்யின்பம்

உண்மைதான் உலகில் சிறந்தது; உயர்ந்தது. உண்மையான அனைத்திலும் அறம் விளங்கும். இயற்கை உண்மையானது, இறையருள் மிக்கது; இறைவடிவானது; அதனால்தான் இறைவனை மெய்ப்பொருள் என்றும் அழைக்கின்றோம் ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற வாசகமே நம் திருவாசகம். மனிதகுலம் சிறக்க மாண்புநெறி காட்டியவர்கள் சங்கத் தமிழர்கள் விண்ணும் மண்ணும் தோற்றுவிக்கும் தேவன்ஒருவனே; அந்த இறைவன் இயற்கையாய் நிறைந்திருக்கும் தன்மையினை,


பாரிடை ஐந்தாய்ப் பரந்
தாய் போற்றி
நீரிடை நான்காய் நிகழ்ந்
தாய் போற்றி
வளியிடை இரண்டாய்
மகிழ்ந்தாய் போற்றி
வெளியிடை ஒன்றாய்
விளைந்தாய் போற்றி

என்று மாணிக்க வாசகரும்,



பாரொடு விண்ணும் பகலு
மாகிப் பனிமலை வரை
யாகிப் பரவையாகி
நீரோடு தீயும் நெடுங்காற்று
மாகி நெடுவெள்ளிடை
யாகி நிலனுமாகி

என்று சுந்தரரும் பாராட்டி, பிரபஞ்சத்தைப் படைக்கும் மெய்ப்பொருளை உணர்பவருக்கே அறம் விளங்கும் என்பதைக் கோடிட்டுக் காட்டியுள்ளனர்.

இறைவன் - அறம்

எல்லாம் வல்ல பரம்பொருளை அடைந்தபின் எத்தொழிலும் எளிதாகின்றது; இனிதாகின்றது; இனிய அறமாகின்றது. இவ்வுலகிலும் எவ்வுலகிலும் இதற்கு மேலும் வேண்டுவது ஏதேனும் உண்டோ? என்று வினவும் குலசேக ராழ்வார் இறைவனுக்கு எது அறம் என்பதையும் தெளிவுபடுத்துகின்றார்.

உலகியல் வட்டத்தில் எத்தகைய பெருவாழ்வுப் இறை வட்டத்தில் வாழும் புல்லுக்கும் நிகராகாது என்பதை உணர்ந்தவர். குலசேகரப் பெருமான் இறைவட்டதில் வாழத்துடிக்கும் துடிப்பைப் பாடிய இவர் தம்மை உய்விக்க இறைவன் எழுந்து வரவில்லையே என்ற ஏக்கத்தைப் பாடத் தொடங்குகிறார். தம்மைக் கரையேற்றுதல் இறைவன் – அறம் என்பதையும் நினைவுறுத்துகின்றார். கரையேற்றுதல் என்பது பிறவியைவெல்லுதல் என்பதாகும்.

இறவாத இன்ப அன்போடு இறைவன் ஆடும் திருக்கூத்தை எதிலிருந்து என்றும் கண்டு கொண்டிருத்தல் வேண்டும் என்று காரைக்கால் அம்மையாரும், மனித்தப்பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தெ என்று அப்பர் அடிகளும் பாடியதன் மூலம் இவ்வுண்மை விளங்குகிறது.

அடியார்களுக்குஇணையாக ஆண்டவனே வந்து அறம் வளர்த்ததும் இத்தமிழ் மண்ணில் தான்! திருவையாற்றில் எழுந்தருளியிருக்கும் இறைவனுக்கு ஐயாறப்பன் என்றும் இறைவிக்கு அறம் வளர்த்த நாயகி ( தர்ம சம்வர்த்தினி) என்றும் இன்றும் பெயர் வழங்கப்பட்டு வருவது இதற்குச் சான்றாகும்.

Source

 
navigate_next
அற நெறியும் ஆரோக்கிய வாழ்வும்

அற நெறியும் ஆரோக்கிய வாழ்வும்: விசாகப் பௌர்ணமி தின அருளுபதேசம்

“அறம் செய்ய விரும்பு ஆறுவது சினம்” என்ற ஔவையாரின் ஆத்தி சூடி வசனத்திற்கு அமைய கடந்த வைகாசி விசாகப் பௌர்ணமிதின தியான வழிபாடுகளில் ஸ்ரீ பேரின்ப ஞான பீடத்தில் பங்குபற்றிய பக்தர்களுக்கும் உலக வாழ் மக்களுக்குமாக ஆன்மீகக் குரு மகா யோகி திரு சி.புண்ணியரெத்தினம் சுவாமிகள் ஆற்றிய ஆன்மீக அருளுபதேசத் தொகுப்பினை ஸ்ரீ பேரின்ப ஞான பீடத்தின் இணைய மற்றும் முகநூல் பக்கம் வாயிலாக உலக மக்களின் ஆன்ம ஈடேற்றத்திற்காக தொடர்ந்தும்  பதிவிடுவதையிட்டு பேரானந்தம் கொள்கிறோம்….

ஔவையாரும் ஆத்தி சூடியினை “அ” வில்தான் தொடங்குகிறார் அதே போல திரு வள்ளுவரும் திருக்குறளை “அ” வில்தான் தொடங்குகிறார் சற்று விரிவாகவும் ஆழமாகவும் இந்த தொடக்கத்தின் உண்மையினை ஆராய்வோமானால் மனித வாழ்வுக்கு அத்தியாவசியமான மெய்ப்பொருள் கிட்டும்!

ஒரு மனிதன் தன் மனதால் அறம் செய்ய அதாவது தர்மம் செய்ய விரும்பினாலே போதும் அடுத்த கட்டமாக சினம் நீங்கி அடுத்த எழுத்தான “ஆ” தொடங்கும் ஆன்மாவுக்கான தொடர்பு கிடைக்கும் அதன் தன்மையினால் அன்பே உருவான இறை நிலையினை எய்துவான்; இறை நிலையில் தன் மனதின் எண்ணங்கள்; அதன் செயல்கள் மூலம் உலகில் ஆயுள்,  ஆரோக்கியம், ஐஸ்வர்யம், நிறைந்த  மனிதாக வாழ்வான் என்பது மனிதர்களால் இதுவரை உணரமுடியாத பேருண்மை!

இவ்வாறு ஆன்மாவோடு தொடர்பு கொண்ட மனிதனை புற விசைகளான கோபம், குரோதம், பகைமை மனப்பாங்கு என்பன தாக்காது. இவ்வாறு தமிழில் அடுத்தடுத்து வரும் எழுத்துக்கள் அத்தனையிலும் வரும் சொற்கள், அந்தப் பொருட்கள் அனைத்தும் பெற்று சுகமாக வாழ்வான். இவ்வாறு அறம் செய்யாத மனிதர்கள், அதை எண்ணாத மனிதர்கள், சினத்தால் ஆட் கொள்ளப் பட்டு சிந்தனைகள் சிதறி புற விசைகள் தாக்கி எத்தனை பொருட்கள் செல்வங்கள் இருந்தாலும் சுகமான ஆரோக்கியமான வாழ்வினை வாழ முடியாமல் அல்லல் படுவதனை கண்கூடாக காண முடிகிறது. இந்த புற விசைத் தாக்கத்தினை பற்றி விஞ்ஞானி நீயூட்டனும் கூறியிருக்கிறார், அதையே ஆன்மீக விஞ்ஞானமும் கூறுகிறது; ஆனால் அறமான அன்பு கருணை காருண்யம் பரோபாகர சிந்தனைகள் விட்டுக் கொடுப்பு என அறம் சார்ந்த எண்ணங்களை எண்ணி அதன் வழியில் மனதினை செலுத்தி இறை சாம்ராஜ்ஜியத்திற்குள் நுழைந்த மனிதர்கள் சுகமான வாழ்வு வாழ்வார்கள். எத்தனை பணமிருந்தும் செல்வமிருந்தும் அனுபவிக்க முடியவில்லையே, அதனை வைத்து எதுவும் செய்ய முடியவில்லையே என்ற ஏக்கத்துடனே பல மக்கள் இந்த அறத்தினை பின்பற்றாமையினால் தம் வாழ்வினை இழந்து அல்லல் பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

உதாரணத்திற்கு ஒரு வீட்டினை எடுத்துக் கொள்ளுங்கள் சீமெந்தால், மரத்தால் உருவாக்கப்பட்ட வீடு; அவ் வீட்டினுள்ளே பாத்திரங்கள் இலத்திரனியல் உபகரணங்கள்  என பல வகையான பொருட்கள் காணப்படும்; இவ்வாறான பல பொருட்களை தன்னகத்தே கொண்டுள்ள கட்டிடம் அதாவது வீட்டினுள்ளேதான் மனிதர்கள் வசித்து வருகிறார்கள். அவ் வேளையில் தீடீரென விசம் பொருந்திய பாம்போ அல்லது விச ஜந்துக்களோ வீட்டினுள்ளே புகுந்து விட்டது என்றால் நாம் அந்த வீட்டிற்குள் அதை வெளியேற்றாமல் நிம்மதியாக சுகமாக உறங்கத்தான் முடியுமா? இல்லையல்லவா! அதே போல்தான் மனித சரீரமும் ஆன்மா வசிக்கும் வீடு இறைவன் குடி கொள்ளும் ஆலயம். அதையேதான் “ஆலயம் தொழுவது சாலவும் நன்று” என்று முன்னோர்கள் குறிப்பிட்டுள்ளார்கள் ஆன்மா லயப்படும் (அமைதி) இடம்தான் ஆலயம். அமைதியில்தான் ஆண்டவனைக் காணலாம் ஆர்ப்பாடம் ஆரவாரிப்பு களியாட்ட நிகழ்வு  மூலம் இறைவனைக் காணமுடியாது. ஆக ஆன்மா வசிக்கும் வீட்டினை மனித மனத்தின் எண்ணமே இயக்குகிறது. மனித மனத்தில் ஏற்படும் தீய எண்ணப் பிரவாகங்களே பல அழிவுகளுக்கும் இயற்கை சீற்றத்திற்கும் காரணம். இன்னும் ஆழமாக ஆராய்ந்தால் உலகப் பிரளயத்திற்கு மனிதனே காரணமாக அமைகிறான் என்ற உண்மை புலனாகும்.

விசம் பொருந்திய எண்ணங்கள் அறமற்ற செயல் காமம், கோபம், குரோதம் போன்ற மனப் பாங்கு என்பனவற்றை உள் வாங்கி அதன் அடிப்படையில் அதன் வழி நடத்தலில் இயங்கும் மனித சரீரம் முன் கூறியபடி அதி விசம் பொருந்திய நச்சுப் பாம்பினையோ விச ஜந்துக்களையோ வீட்டினுள் வைத்துக் கொண்டு உறங்குவதற்கு சமனான ஒரு செயல் என்பதுவும் புலனாகிறது. இவ்வாறான விடயங்களை மக்கள் உணராத காரணத்தினாலும் சிறந்த ஒரு வழிகாட்டல் இல்லாமையினாலும் அல்லல்பட்டு வேதனையான வாழ்வினை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்!

மக்கள் மனதில் ஒரு வினாவும் தற்போது எழக்கூடும்; இறைவன் படைக்கிறார் மனதில் எண்ணத்தினையும் இறைவனே தருகிறார் அப்போது ஏன் துன்பம் வருகிறது என எண்ணலாம்!

நல்லவற்றை பிரித்தெடுத்து அதை இனங்கண்டு கொள்வதற்காக பகுத்தறிவையும் அந்த இறைவனே அருளியுள்ளார் என்பதனையும் மனிதர்கள் மறந்து விட்டார்கள்.

ஒரு விடயத்தினை மக்கள் முதலில் உணர வேண்டும் தென்னை மரத்திலிருந்து இளநீரும் பெற்று பருகலாம் போதை தரும் “கள்” ளினையும் பெற்று பருகலாம் இங்கே பகுத்தறிவை பயன்படுத்திய மனிதர்கள் வெல்கிறார்கள்.

இள நீரைப் பருகினால் நல்ல உற்சாகம் கிடைக்கும் என உணர்ந்து அதைப் பருகினால் அவர்களுடைய அன்றைய கடமைகள் அனைத்தையும் தடைகளின்றி உற்சாகமாகவும் முழுமையாகவும் செய்து முடிக்கக் கூடிய தன்மையினை பெறுவார்கள்! ஆனால் போதை தரும் கள்ளினை பருகினால் போதை தலைக்கேறி மதி மயங்கி கீழான காரியங்களில் தன்னிலை மறந்து ஈடுபட்டு சமூகத்தில் தீயவர் என்ற எண்ணப்பாட்டினை உண்டு பண்ணுகிறார்கள்!

அது மட்டுமல்ல கோபம் கொண்டு மனித தன்மை இழந்து மிருக குணம் வளர்ந்து; தான் மனிதன்; ஆறறிவு படைத்தவன்; தனக்கு பகுத்துணரும் தன்மை உண்டு என்பதை மறந்து கொலை கொள்ளை என பல தீய செயல்களில் ஈடுபடும் போது அவனுக்கு தண்டனையாக விலங்கிட்டு சிறைச்சாலைக் கூண்டில் அடைக்கப்படுகிறான்; இங்கே சற்று சிந்தியுங்கள் மனிதன் தன் மனதின் மூலம் சேமித்த தீய எண்ண அலைகள் அவனை தீய செயல்களை செய்யத் தூண்டி காலத்தின் பிடியில் கைதியாகிறான்; மிருக குணமுடையவனாக விலங்காக கணிக்கப்பட்டு கூண்டில் அடைபட்ட  மனிதன் தன்னிலை உணர்ந்து சிந்தித்து தெளிவுறும் வேளை அவனுக்கு விடுதலை கிடைக்கிறது என்பதனை இந்த சாதாராண செயற்பாட்டின் மூலம் அறிய முடிகிறதல்லவா!

 
navigate_next
திரிகடுகத்தில் அறம்

திரிகடுகம்


காரம், கார்ப்பு (உறைப்பு) என்று பொருள்படும். கடுக்கும் பொருளாகிய சுக்கு, மிளகு, திப்பிலிகளுள் ஒன்றையோ அல்லது இம்மூன்றையுமோ கடுகம் என்பது உணர்த்தும். சுக்கு, மிளகு, திப்பிலி ஆகிய மூன்றையும் குறிக்கும்போது இது திரிகடுகம் என்று சொல்லப்பெறும். (பிங்கல நிகண்டு, 352) 

ஆசிரியர் 

திரிகடுகம் என்ற உயிர் மருந்து நூலை ஆக்கியவர் நல்லாதனார். ஆதனார் என்பது இயற்பெயர். ‘நல்’ என்பது அடைமொழி. காப்புச் செய்யுளில், பூவை வண்ணன் ஆகிய திருமால் உலகம் அளந்தது, குருந்தமரம் சாய்த்தது, மாயச் சகடம் உதைத்தது ஆகியவை பற்றிக் கூறியிருப்பதால் இவர் வைணவ சமயத்தவர் என்பது பெறப்படும். இவர் காலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு. 

நூல் அமைப்பும் சிறப்பும் 

திரிகடுகம் காப்புச் செய்யுள் உட்பட 101 வெண்பாக்களைக் கொண்டது. முதற் பாடலிலேயே நூலின் பெயர்க்காரணத்தை, ‘திரிகடுகம் போலும் மருந்து’ என்று ஆசிரியரே குறிப்பிடுகின்றார். திருக்குறள், நாலடியார் போன்ற நூல்களின் கருத்துகளை இந்நூல் பெரிதும் பின்பற்றுகிறது. கொல்லாமை, ஊன் உண்ணாமை, அருளுடைமை, இன்சொல் போன்ற இவ்வுலகிற்குரிய நல்வழிகளையும் அவாவறுத்தல், மெய்யுணர்தல் போன்ற மறுமைக்குரிய நல்வழிகளையும் இந்த நூல் எடுத்துக்காட்டுகின்றது. இது மனித சமுதாயத்திற்கு இம்மைக்கும் மறுமைக்கும் நல்ல வழியினைக் காட்டும் நூலாகும். ஒவ்வொரு வெண்பாவிலும் மூன்று அறக்கருத்துகள் சொல்லப்படுகின்றன.


இந்நூலில் அறத்தின் உயர்வும் சிறப்பும் எடுத்துரைக்கப்படுகிறது. இல்லறம் நல்லறமாக ஆவதற்குக் கணவனும் மனைவியும் எப்படி வாழ்தல் வேண்டும் என்பது 100 பாடல்களில் 35 இடங்களில் கூறப்படுகிறது. இது இல்லறத்தின் உயர்வை உணர்த்தும் வகையில் விளங்குகிறது. ‘கொண்டான் குறிப்பறிவாள் பெண்டாட்டி. பெய் எனப் பெய்யும் மழை’ (திரி-96) என்று இல்லறத்தில் மனையாள் பெருமை பேசப்படுகிறது.


பாடுபட்டுச் செல்வத்தைச் சேர்த்து அதைப் பாதுகாக்கவும் முற்படுகின்றனர் மக்கள். தம்மையே புகழ்ந்து கொண்டிருப்பவர்கள் தக்கார் துணையைப் பெறுதல் முடியாது. அதனால் அவர்தம் செல்வம் குறையும். காரணமின்றியே பலரையும் சினந்துரைப்பவரிடத்தில் உள்ள செல்வம் பகையினால் அழியும். தன் நிலை அறியாமல் பார்க்கும் பொருளையெல்லாம் விரும்புபவரிடத்தும் செல்வம் நில்லாமல் நீங்கும் என்பதைச் ‘செல்வம் உடைக்கும் படை’ எனக் குறிப்பிடுகிறார். 

 

தன்னை வியந்து தருக்கலும் தாழ்வின்றிக் 
கொன்னே வெகுளி பெருக்கலும் - முன்னிய 
பல்பொருள் வெஃகும் சிறுமையும் இம்மூன்றும் 
செல்வம் உடைக்கும் படை


 

(திரி - 38)


(கொன்னே = வீணாக; வெஃகுதல் = விரும்புதல்) மேலே கூறிய மூன்றும் செல்வத்தை முற்றிலுமாக அழிக்கும் என்ற கருத்தை இந்தப் பாடல் உணர்த்துகிறது அல்லவா!



அரசர் இயல்பு, அமைச்சர் இயல்பு, இளவரசன், ஒற்றர் ஆகியோர் செய்ய வேண்டுவன என்றெல்லாம் கூறப்படும் கருத்துகள் அரசியல் வாழ்க்கையில் ஏற்படக் கூடிய நோய் நீக்கும் மருந்துகளாகும்.


தக்க வயது வந்ததும் திருமணம் செய்து கொள்ள நினைப்பதும், மக்கட் பேற்றை விரும்புவதும் மனித இயல்பு. ஆனால் எல்லோருக்கும் இப்பேறு கிடைப்பதில்லை அல்லவா! மக்கட் பேற்றினைப் பெறவும் மனிதன் நல்ல அறங்களைச் செய்திருக்க வேண்டும் என்று கூறி அறத்தை வலியுறுத்தும் பாடலும் திரிகடுகத்தில் உண்டு (திரி-62).


காப்பாற்ற வேண்டியன பெண்டிர், பொருள், உணவு ஆகியவை இவை உரிய முறையில் காப்பாற்றப் படாமல் போனால் கெட்டுப்போகும் என்று காட்டுகிறது ஒரு பாடல் (திரி-47).



நட்புக் கொள்ளத் தகுதியற்றவர், நட்புக்கொள்ள ஏற்றமுடையவர் யாரென்பதை எடுத்துச் சொல்கிறார் நல்லாதனார் (திரி-12,15).


கல்வியின் பயன்கள் கூறப்படுவதால் கல்வியின் வலிமையும் பயனும் நமக்கு உணர்த்தப்படுகிறது.



வாழ்வியல் உண்மைகள் பல ஆங்காங்கே வெளிப்படுவதைத் திரிகடுகத்தில் காணலாம். எப்படி எச்சரிக்கையாய் இருக்க வேண்டும் என்பதும் பயன்தராத செயல்கள் எவை என்பதும் எடுத்துரைக்கப்படுகின்றன.



பிறப்பு நீக்குவது வாழ்வின் முடிந்த நோக்கமாகும் என்பதையும் திரிகடுகம் எடுத்துரைக்கிறது. 



அறத்தின் உயர்வும் சிறப்பும் 

இளமையில் கல்வி கற்பதும், பெற்றோர்களை வழிபட்டுப் போற்றுதலும், சான்றோர் நெறியில் செல்வதும் உயர்ந்த அறங்களாகும். நல்லவருள் நல்லவர் எனப்படுதல், நட்பு கொள்வதில் சிறந்தவர் எனப்படுதல் ஆகியன நல்லவர் மேற்கொள்ளும் அறங்களாகும்.



உலகிலேயே சிறந்த அறம் வறியவர்க்கு வேண்டுவன கொடுத்தல் ஆகும். வறுமை நிலையிலும் கீழான செயல்களைச் செய்யாதிருத்தல் சிறந்த அறம் ஆகும். (திரி-41) 


இயற்கையும் அறமும் 

அறச் செயல்களுக்கும் இயற்கை நெறிகளுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. மன்னனும் மக்களும் நெறி தவறி நடந்தால் இயற்கை தன் நிலை மாறும். குடிமக்களை வருத்தி வரி வாங்கும் அரசனுடைய நாட்டில் மழை பெய்யாது. பொய் பேசுபவர் நாட்டில் மழை பெய்யாது. வலிமை வாய்ந்த இயற்கையை நெறிப்படுத்தும் ஆற்றல் அறத்திற்கு உண்டு என்பதை உறுதிப்படுத்துகிறது திரிகடுகம். (திரி-50) 

அறத்திற்கு வழி வகுப்பன 

அறம் செய்தால் இன்பத்தையும் அறம் அல்லாத செயல் செய்தால் துன்பத்தையும் தரும் என்பதை எடுத்துச் சொல்லி மனிதரை நல்வழிப்படுத்துகிறது திரிகடுகம்.


கடன்படாது வாழ்பவன், வந்த விருந்தினரைப் போற்றுபவன், ஒருவர் சொல்லியதை மறவாது மனத்தில் வைப்பவன் இம்மூவரையும் நண்பர்களாகப் பெறுவது நன்மை தருவதாகும். அது அறம் செய்ய வழிவகுப்பதாகும். (திரி-12)


 துன்பம் பயப்பன

மூடரோடு சேர்தல், மன உறுதி கொண்ட மனைவியை அடித்தல், பகைவர் முன்னே தம் செல்வத்தைக் காட்டுதல், பகைவருடன் நட்பு கொள்ளுதல் ஆகியன இறப்பது போன்ற துன்பத்தைத் தரும் (திரி-3).


எனவே, அத்தகையை செயல்களை நீக்க வேண்டும் என்கிறார் நல்லாதனார்.

நல்ல குடும்பப் பண்பு

கணவன், மனைவி, மக்கள் அடங்கியது குடும்பம். நல்ல குடும்பம் பல்கலைக்கழகம் என்பார் பாரதிதாசன்.


குடும்ப உறுப்பினர்கள் எப்படி இருக்க வேண்டும் என்று திரிகடுகம் சொல்கிறது. ‘ஏவா மக்கள் மூவா மருந்து’ என்பது ஆன்றோர் வாக்கு. பெற்றோர் ஏவாமல் தாமாகச் செய்யும் இயல்பு மக்களுக்கு வேண்டும். அவர்கள் என்றும் கெடாத நல்ல மருந்தைப் போன்றவர்கள். ஏவியும் கேளாத மக்கள் பயனற்றவர். இல்லறத்தில் தனக்குரிய அறம் மறந்து மனைவியைப் போற்றாத கணவன் பயனற்றவன். செல்வத்தைப் பெருக்குபவளாக மனைவி இருக்க வேண்டும். வீட்டின் செல்வத்தைத் தேய்க்கின்ற மனைவி பயனற்றவள் என்று குறிப்பிடுகிறார் நல்லாதனார் (திரி-49).


தனி மனித நலம் - குடும்ப நலமாய் - சமுதாய நலமாய் விரிகிறது. எனவே, நல்ல சமுதாயம் உருவாக அடிப்படையாய் அமைவது நல்ல குடும்பங்களே. அவை நலம் உடையதாய் இருக்க வேண்டும் என்ற கருத்தைக் குடும்ப உறுப்பினர் எப்படி இருக்கக் கூடாது என்பதைச் சொல்லி விளக்கும் பாடலைப் பாருங்கள்.


ஏவாது மாற்றும் இளங்கிளையும் காவாது 
வைதெள்ளிச் சொல்லும் தலைமகனும் - பொய்தெள்ளி 
அம்மனை தேய்க்கும் மனையாளும் இம்மூவர் 
இம்மைக் குறுதியில் லார்



 (திரி - 49)

(இளம்கிளை = மக்கள்; தலைமகன் = கணவன்; வைது = ஏசி; எள்ளி = இகழ்ந்து) 


கல்வியின் பயன்கள் 

சிறந்த கல்வியின் பயன்கள் என்னவென்று பார்ப்போமா? கற்றதன் பயன் கற்றதற்கேற்ப நடந்து கொள்ளும் போதுதான் கிடைக்கிறது. அவ்வாறு நடந்து கொள்ளாதவர்கள் கல்வியறிவைக் கைவிட்டவராவர். எனவே தான் வள்ளுவர், 

 

கற்க கசடறக் கற்பவை கற்றபின் 
நிற்க அதற்குத் தக 

(குறள் - 391)


என்றார்.

முதுமைக் காலத்தும் ஆசைகளைத் துறக்காதவர்கள், வீண்மொழி பேசும் துறவிகள் ஆகியோர் கல்வியறிவைக் கைவிட்டவர் ஆவர். (திரி-17)

 

நல்ல கல்வி இப்பிறவியில் மட்டுமல்லாது மறுபிறவிக்கும் பயன் கொடுக்க வல்லது. கல்வி முயன்றும், விரும்பியும் கற்க வேண்டிய ஒன்று என்பது தெளிவாகிறதல்லவா? 

துன்பத்தைத் தருவன

அடுத்தவர் பொருளுக்கு ஆசைப்படுதலும் சுற்றத்தார் பசித்திருக்கத் தாம் சோம்பலை மேற்கொள்வதும் கல்லாதவன் என்று ஒருவனை இகழ்தலும் இவை மூன்றும் துன்பத்தைத் தருவன.

 

வருவாயில் நான்கிலொருபங்கை அறவழியில் செலவு செய்தல், எளிதில் விளங்கித் தோன்றும் சிறப்புடையவராக அமைதல், பலவற்றையும் ஆராய்ந்து நல்லவற்றைப் படித்தல் ஆகியன சான்றோர்க்கு உரிய கொள்கைகளாம். (திரி-21)

 

வீடுபேறு அடையவழி 

பற்று என்பது ஒருவனைக் கட்டும் விலங்கு; பொருள்களின் மேல் மனம் செல்லவிட்டு அப்பொருள்களை அடைய முயலும் விருப்பமே அவா; பகைவனைப் போலத் தவறாமல் தீங்கு விளைவிப்பது பொய். இந்த மூன்றையும் விலக்க வேண்டும். பற்று, அவா, பொய், ஆகியவற்றை நீக்கினால் வீடுபேறு அடையலாம் என்று கூறுகிறது. (திரி-22) 

உயர்ந்தோர் யார்? 

கடமை தவறாத அந்தணன், நெறி தவறாத மன்னன், கவலையில்லாத குடிமக்கள் ஆகியோர் உயர்ந்தோர் எனப் போற்றப்படுவர். (திரி-34) 

பிறந்தும் பிறவாதார்

 
அருளில்லாதவனும், பொருளினைத் தானும் அநுபவிக்காமல் பிறர்க்கும் கொடுக்காமல் பூமியில் புதைத்து வைப்பவனும், பிறர் மனம் வருந்தும்படி பேசுகின்றவனும் ஆகிய இம்மூவரும் மக்களாய்ப் பிறந்தும் பிறவாதவர் ஆவார். (திரி-92) 

பிற உண்மைகள் 

அறநெறியில் ஒழுகுதல் பற்றியும், இல்லாவிடில் வரும் கேடு பற்றியும், கல்வியின் பயன்கள் பற்றியும் பார்த்தோம். இனி உலகியலில் சில உண்மைகள் கூறி மனித வாழ்வை நெறிப்படுத்தும் பணியைப் பற்றித் திரிகடுகப் பாடல்கள் சொல்வதைக் காண்போமா!

எச்சரிக்கையாய் இருக்க வேண்டுவன

வாழ்க்கையில் எது குறித்து நாம் எச்சரிக்கையாய் இருக்க வேண்டும்? பின்னால் வரவிருக்கும் முதுமைப் பருவம், நண்பரிடையே பெருந்துன்பத்தைத் தரும் பிரிவு, உடம்பைக் கரையச் செய்து வருத்துகின்ற தீராத நோய் ஆகிய மூன்றும் கள்வரை விட அஞ்சக்கூடியன. அவற்றுக்கு அஞ்சி அதனால் எச்சரிக்கையாய் இருக்க வேண்டும் என்பதை, 

ஒருதலையான் வந்துறூஉ மூப்பும் புணர்ந்தார்க்கு 
இருதலையும் இன்னாப் பிரிவும் - உருவினை 
உள்ளுருக்கித் தின்னும் பெரும்பிணியும் இம்மூன்றும் 
கள்வரின் அஞ்சப் படும்


 

(திரி-18)


என்ற பாடல் உணர்த்துகிறது.



பயன் தராத செயல்கள் 


காலம் பொன்னை விட மேலானது. காலத்தை நாம் பயனுள்ள முறையில் செலவழிக்க வேண்டும் அல்லவா? அரிய பகைவனுடன் போரிடும் முயற்சி வீண். அறிஞர் அவைக்கு அஞ்சுபவன் கற்ற நூல் யார்க்கும் பயன்படாது வழக்கைத் தீர்க்கும் திறம் இல்லாதவர் சபையில் இருப்பதும் பயனற்றதே என்று காட்டுகிறது திரிகடுகம். (திரி-10)



ஒரு சிலர் மற்றவர் கல்வித் தகுதியை ஆராயாது குறை கூறிக் கொண்டே இருப்பர். இது போன்ற வீண் செயல் வேறெதுவும் இல்லை என்பதை மிக எளிய உவமையினால் விளக்குகிறது திரிகடுகம். ஒருவன் கல்வித் தகுதியை ஆராயாது குற்றம் கருதுதல் உமியைக் குத்துவது போலப் பயனற்றது என்கிறது. (திரி-28)



சிலர் வெகுண்ட பேச்சால் பிறரை வெல்லலாம் என்று நினைப்பார்கள். ஆனால் அது பயன் தராது என்கிறது திரிகடுகம்(28). தமக்கு வரும் துன்பம் கண்டு அஞ்சாதவரோடு கொண்ட நட்பு, விருந்தோம்பாத குணமுடைய மனைவியோடிருப்பது, நற்குணமில்லாதவர் அருகில் குடியிருப்பது ஆகியவை பயனற்றவை என்றும் காட்டுகிறது (திரி-63)

 

Source

 
navigate_next
திருக்குறளில் அறம்

அறன்| அறம் என்ற இரு சொற்களும் ஒரே பொருளைக் குறிக்கும். அறம் என்று கூறினாலே அது துறவிகளிடம் இருக்க வேண்டிய ஒரு பண்பு என்று பெரும்பாலோர் நினைக்கின்றனர். ஆனால் நம் உலகவர் திருவள்ளுவர்


‘அறன்எனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்
பிறன்பழிப்பது இல்ஆயின் நன்று’


என்று கூறுகிறார். மனைவியுடன் வாழும் இல்வாழ்க்கையே அறம் எனப்படும் என்று கூறி| துறவற வாழ்க்கையும் பிறரால் பழிக்கப்படாமல் இருந்தால் நல்லதே என்கிறார். இல்லறத்தார் அறத்தைப் பற்றி தெளிவாக அறிதல் வேண்டும். மனதில் மாசு இல்லாமல் இருப்பதே அறம்| மற்றவையெல்லாம் ஆடம்பரச் செயல்களே என்பதை


‘மனத்துக்கண் மாசுஇலன் ஆதல்: அனைத்துஅறன்
ஆகுல நீர பிற’


என்ற குறளின் மூலம் விளக்குகிறார். ஐம்பூதங்களாலான அண்டத்தில் உள்ளதே பிண்டத்திலும் உள்ளது. உலகில் நன்மையும் தீமையும் கலந்துள்ளதைப் போல| உள்ளத்திலும் நல்ல இயல்புகளும் தீய இயல்புகளும் கலந்தே உள்ளன. தீய இயல்புகளைப் போக்கி மனதைச் செம்மைப்படுத்துவோரே உயர்ந்தவர். நிலத்தில் களை விரைவாக வளர்வது போல தீய இயல்புகள் விரைவாக வளரக்கூடியன. களை எடுக்காமல் பயிர் செழித்து வளராது. அதுபோல மனதிலுள்ள தீய இயல்புகளை அகற்றி நல்ல இயல்புகள் வெளிப்பட வழி செய்ய வேண்டும். ஆகவே மனதை மாசில்லாமல் வைத்துக் கொள்வதே முதலில் செய்ய வேண்டிய அறச்செயலாகும்.


மனதிலுள்ள மாசுகள் யாவை என்ற கேள்வி எழுகிறதல்லவா?


‘அழுக்காறு| அவா| வெகுளி| இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம்’


என்ற குறள் மனமாசுகளை விளக்குகிறது. மற்றவர்கள் உயர்வைக் கண்டு பொறாமைப்படுதல்| புலன்களைக் கட்டுப்படுத்த முடியாமல் ஆசை கொள்ளுதல்| ஆசை நிறைவேறாதபோது கோபமடைதல்| கோபத்தின் காரணமாக தீய சொற்களைச் சொல்லுதல் ஆகிய நான்கும் மனதின் மாசுகள்| இவற்றை விலக்கி செய்யப்படுவது அறம் எனப்படுகிறது. மனதில் இந்த மாசுகளை வைத்துக்கொண்டு அறச்செயல்கள் செய்ய முற்படுவது செத்த எலியின் நாற்றத்தைப் போக்க ஊதுவத்தி கொளுத்துதல் போன்றதாகும். செத்த எலியை தூக்கிப் போடுவதே முதலில் செய்ய வேண்டியதாகும். இந்த மாசுகளின் தன்மைகளை அறிந்தாலே அவற்றை நீக்குதல் எளிதாகும்.


முதல் மாசு ‘அழுக்காறு’ என்றும் பொறாமைக் குணமாகும். பிறர் நன்றாக வாழ்வதைக் கண்டு சகிக்க முடியாத நிலையே பொறாமை எனப்படும். பொறாமை என்ற குணம் பிறரை குறிவைத்து தன்னையேச் சுட்டுக் கொள்கிறது. பகைவர் தீங்கு செய்யத் தவறினாலும் பொறாமைக்குணம் தன்னை உடையவர்க்கு தவறாமல் தீங்கை விளைவிக்கும். இக்குணத்தை ‘பாவி’ என்று திருவள்ளுவர் குறிப்பிடுகிறார். பொறாமை என்று சொல்லப்படும் பாவி தன்னை உடையவனது செல்வத்தையெல்லாம் அழித்து| அவனை தீயவழியில் கொண்டுபொய் சேர்த்து விடும். யாரைப் பார்த்து பொறாமைப்படுகிறார்களோ அவர்கள் மேன்மையடைவதும்| பொறாமைப்படுகிறவர்கள் கீழ்மையடைவதும் இயற்கையின் நியதி. நம் வாழ்க்கையை பிறர் வாழ்க்கையுடன் ஒப்பிட்டு பார்த்து வருந்துதல்| பொறாமை குணத்தை அதிகப்படுத்தும்.


மனதில் உள்ள அடுத்த மாசு ‘ஆசை’. (அவா) அத்தியாவசியத் தேவைகளை அளவுடன் நிறைவேற்றிக் கொள்வது அவசியமான செயலாகும். அவசியமில்லாத தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள விரும்புவதும்| புலன்கள் செல்லும் வழியில் செல்வதும் ஆசை எனப்படும். ஆசையை அடக்காவிட்டால் அது வேகம் கொண்டு பேராசையாக மாறிவிடும். பேராசை புத்தியை மழுங்கச் செய்து விடும். ஆசை இல்லாதவன் இழப்பதற்கு ஒன்றுமில்லை.


‘அஞ்சுவது ஓரும் அறனே: ஒருவனை
வஞ்சிப்பது ஓரும் அவா’


ஒருவனை வஞ்சித்துக் கெடுப்பது ஆசையே. ஆகவே மனதில் ஆசை தோன்றாதவாறு அஞ்சி வாழ்வதே அறன் ஆகும். ‘தூய்மை என்பது அவா இன்மை’ அதாவது மனத்தூய்மை என்பது ஆசை இல்லாமலிருத்தலே என்பதாகும். ‘இல்லறத்தார் ஆசை இல்லாமல் செயலாற்றுவது சாத்தியமா?’ என்ற கேள்வி எழலாம். எந்தச் செயலையும் விரும்பிச் செய்தால்தான் எளிதாக இருக்கும்| சிறப்பாக அமையும். ஓரளவு விருப்பம் வேண்டியதே. ஆனால் ஆசை என்பது தான் விரும்பியதை எந்த வழியிலாவது அடைய வேண்டும்| அடைந்தே தீருவது என்று செயலாற்றுவது. இதில் விருப்பம் நிறைவேறவில்லையெனில் ஏமாற்றமும் கோபமும் தொடரும். ஆகவே ஆசை என்ற மாசு நீக்கப்பட வேண்டும்.


திருவள்ளுவர் குறிப்பிடும் அடுத்த மாசு ‘வெகுளி’ எனப்படும் கோபம். பிறர் நலத்திற்காக தீங்கற்ற முறையிலே செயல்படும் ஆக்கபூர்வமான கோபத்தை இங்கே எடுத்துக் கொள்ள வேண்டாம். இங்கு மாசாகக் குறிப்பிடும் கோபம்| ஆசை நிறைவேறாததால் ஏற்படும் கோபமாகும். கோபம் சிந்திக்கும் திறமையை அழித்துவிடும். பிறகு மனம் எங்கே? மனிதன் எங்கே? அரக்கத்தனம்தான் மிஞ்சும்.


‘தன்னைத்தான் காக்கில் சினம் காக்க’ என்கிறார் திருவள்ளுவர். தனக்கு துன்பம் வராமல் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்று ஒருவர் நினைத்தால் கோபம் கொள்ளக்கூடாது. தன்னை உடையவரையே கொல்லும் தன்மையுடையது சினம்.


நான்காவதாக கூறப்படும் மாசு இனிமையற்ற சொற்களைப் பேசுதல். ஒருவன் மற்றொருவனை தீயினால் சுட்டதால் ஏற்பட்ட புண் உடம்பில் இருந்தாலும் அவனது உள்ளத்தில் ஆறிப்போய் விடும். ஆனால் கடுஞ்சொற்களைக் கூறும்போது உள்ளத்தில் ஏற்படும் புண் ஒரு நாளும் ஆறாது. ஆகவே கொடிய வார்த்தைகளை கூறும் தன்மையும் ஒரு மாசாகும். இந்த மாசுகளை நீக்கி நடப்பதே அறமாகும்.


ஐஐ சத்தியத்தின் வழியில் நடப்பதும் அறமாகும். உண்மை| வாய்மை| மெய்மை| ஆகிய மூன்றும் சேர்ந்ததே சத்தியமாகும். உள்ளத்தில் தூய்மை உண்மை| பேச்சில் தூய்மை வாய்மை| செயலில் தூய்மை மெய்மை எனப்படும். இறைவன் குடிகொண்டிருக்கும் கோவிலாக உள்ளம் விளங்குகிறது. ஆகவே உள்ளத்தூய்மை இன்றியமையாதது: அனைத்து எண்ணங்களின் பிறப்பிடம் உள்ளம். நல்ல எண்ணங்களை மனதில் உதிக்கச் செய்வதே உள்ளத்தை தூய்மையாக வைத்திருக்கும் வழியாகும். நமது நல்ல எண்ணங்கள் நூறாயிரம் தேவதைகளைப் போன்று நமக்கு நன்மை புரிய காத்திருப்பன. நமது தீய எண்ணங்கள் நூறாயிரம் புலிகளைப் போன்று நம் மீது பாயத் தயாராக இருப்பன. இவை செயல்பட இறைவனின் கண்ணசைவே போதும். உள்ளத்தனையவே உயர்வு ஏற்படும்.


அடுத்து வாய்மை| மற்றவர்களுக்கு ஒரு சிறிதும் தீங்கு தராத சொற்களைச் வாய்மையைப் பறைச்சாற்றும். மனதில் நினைப்பதை அப்படியே பேசுதல் வாய்மை என்பது பொதுவான கருத்து. அவ்வாறு பேசுதல் சிறந்ததேயாயினும் சில நேரங்களில் விரும்பத்தகாத விளைவு ஏற்படலாம். ஆகவே வாய்மையைப் பற்றிய வள்ளுவரின் கருத்தை பின்பற்ற வேண்டியது அவசியமாகும்.



‘வாய்மை எனப்படுவது யாதுஎனின் யாதுஒன்றும்
தீமை இலாத சொலல்’


பிறருக்குத் தீங்கு ஏற்படாதவாறு பேசுவதே வாய்மையாகும். ‘பொய்மையும் வாய்மை இடத்த’ என்று அடுத்த குறளில் கூறப்படுகிறது. அதாவது பிறருக்கு நன்மை ஏற்படுமென்றால் பொய் பேசுதலும் வாய்மையேயாகும் எனப்படுகிறது. நல்ல விளைவுகளை உண்டாக்கும் பொய் சத்தியமாகும்| தீய விளைவுகளை ஏற்படுத்தும் மெய் சத்தியமல்ல என்பது பெரியோர் கருத்து. ‘பொய்யான உண்மைகளும்| மெய்யான பொய்களும் உண்டு’ என்பது இங்கிலாந்து நாட்டு பழமொழி.


பேச்சில் தூய்மையும் இனிமையும் இருந்தால் நமக்கும் மகிழ்ச்சி| பிறருக்கும் மகிழ்ச்சி. சமீபத்தில் செய்தித்தாளில் வெளியான ஒரு நிகழ்ச்சி. ஒரு தொடக்கப்பள்ளியில் ஒவ்வொரு வகுப்புக்கும் வெளியில் பூச்செடிகளை வளர்த்து வந்தனர். ஒரு வகுப்பைச் சேர்ந்த குழந்தைகள் தாங்கள் வளர்க்கும் ரோஜா செடியின் அருகில் சென்று| “நாங்கள் உனக்கு பாதுகாப்பாக இருப்போம். உனக்கு முட்கள் அவசியமில்லை” என்று திரும்பத் திரும்ப காலையிலும் மாலையிலும் கூறுவார்களாம். அந்த செடியில் முட்கள் இல்லாமல் மலர்கள் மலர்ந்தன என அறிந்தபோது அனைவரும் வியந்தனர். இந்த அற்புதத்திற்கு காரணம் குழந்தைகளின் வாய்மையே| அதாவது இனிய சொற்களே ஆகும். வாய்மைக்கு இயற்கையே வளைந்து கொடுக்கிறது.


தூய்மையான நோக்கமுடைய செயல் மெய்மை எனப்படும். பலர் கூடிச் செய்யும் தொண்டு நிறுவனங்களாகட்டும் அல்லது தனி மனிதானாகட்டும் --எண்ணற்ற வகையில் சேவை செய்து வருவது பெருமைக்குரியது. தூய்மையான நோக்கமுடைய எந்த செயலும் இறையருளைப் பெற்றுத்தரும் வலிமை பெறுகிறது. உள்ளத்தில் ஊனமில்லாத யார் வேண்டுமானாலும் மெய்மையைக் கடைப்பிடிக்கலாம். உடல் ஊனமுற்றிருந்தும்| உள்ளம் ஊனமடையாத பலரின் சேவை மெய்மைக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது. போக்குவரத்து நெரிசலில் விபத்துக்குள்ளாகி தன் ஒரு காலை இழந்த சகோதரர் ஒருவர்| தன் பணி முடிந்ததும் சக்கர நாற்காலியில் அமர்ந்து மாலை நேரங்களில் நெரிசல் மிகுந்த சாலையில் காவலருக்கு உதவி செய்வதை அறிந்த போது அந்த நிகழ்ச்சி நாமும் பிறருக்கு உதவ வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது.


ஐஐஐ. தீமையை எதிர்ப்பதும் அறமாகும். தீமையை எதிர்க்கும் போது தீமை செய்ய வருபவர்கள் அஞ்சக்கூடிய வகையில் எதிர்க்க வேண்டுமே தவிர அவர்களை அழிக்கக் கூடிய வகையில் எதிர்க்கக்கூடாது. அதாவது தீமையை ஒடுக்க வேண்டும். தீமை செய்பவர்களை ஒடுக்கக் கூடாது. தவிர்க்க இயலாத சூழ்நிலையில் மட்டும் பெரிய அதர்மத்தை தடுக்க சிறிய அதர்மத்தை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகிறது. சில தீமைகளுக்கு ஆதரவு தராமல் மறைமுகமாக எதிர்க்க வேண்டும். சிலவற்றை தனித்தும்| பலவற்றை பலரும் கூடியும் எதிர்க்க வேண்டும்.


தீமையை எதிர்க்கும் சக்தி எப்போது வரும்? நாம் தீமை செய்யாமல் இருக்கும்போது தான். பிறர் தீமையை எதிர்க்கும்முன்| நம் உள்ளத்தில் உள்ள தீமையை எதிர்க்க வேண்டும். மறந்தும் கூட பிறருக்கு தீமை செய்ய நினைக்கவும் கூடாது. அவ்வாறு நினைத்தால் அறக்கடவுளே நமக்கு தீமை புரிய நினைக்கும். ஆகவே நாமும் தீமை செய்யக்கூடாது| தீமை செய்பவர்களை ஆதரிக்கவும் கூடாது. தீமைக்கு ஆதரவு தரத் தொடங்கினால்| படிப்படியாக நாமே தீமை புரியும் நிலைக்கு மாற்றப்படுவோம்.


ஐஏ.நல்லவற்றை செய்வதும்| நல்லவற்றை ஆதரிப்பதும் அறமாகும். ‘அறம் செய்ய விரும்பு’ என்றார் நம் மூதாட்டி. அறத்தை செய்ய நாம் விரும்பினால் அதற்கான சூழ்நிலையை இறைவன் ஏற்படுத்தி தந்துவிடுவார். செய்ய விரும்புவது நம் செயல்| செய்ய வைப்பது இறைவன் அருள். ‘அருள் இல்லார்க்கு அவ்வுலகில்லை’ என்பது ஐயனார் வாக்கு. இந்த அருளைப்பெற ஒரே வழி பிறருக்கு நன்மையளிக்கும் அறச்செயல்களை முடிந்த அளவு| தகுதியானவர்களுக்கு தக்க சமயத்தில் செய்ய வேண்டியதே.


அறத்தைப் பற்றி எழுதும் போது நம் தெய்வப்புலவர் ‘அறன் வலியுறுத்தல்’ என்ற தலைப்பை கொடுத்துள்ளார். அறம் மாத்திரம் ஏன் வலியுறுத்தி சொல்லப்படுகிறது? அறவழியில் நிற்போர் இறையருளைப் பெற்றவர்கள். இறைவனால் சோதிக்கப்படும் பாக்கியத்தைப் பெற்றவர்கள். இவ்வுலகில் ஒரு பட்டம் பெற எவ்வளவு பாடுபட வேண்டியுள்ளது. அப்படியென்றால் இறைவன் தரும் பட்டம் பெற பல தடைகளை கடந்தேயாக வேண்டும். கற்பாறை சிலையாவதற்கு முன் உளியிடம் எத்தனை அடிகளை வாங்க வேண்டியுள்ளது! அறவழியில் நடப்பவர்கள் இறைவன் வைக்கும் தேர்வில் வெற்றியடைய சோதனைகளை எதிர்கொள்ளும் மன உறுதியுடன் செல்ல வேண்டியிருப்பதால் அறன் வலியுறுத்தி சொல்லப்படுகிறது.


அறத்தால் வரும் இன்பமே உண்மையான இன்பம். இது நாம் தேடிப் போவதல்ல| இறைவன் தருவது. இந்த இன்பத்தை பெறுவதே வாழ்வின் குறிக்கோள். ‘அன்று அறிவோம் என்னாது அறம் செய்க’—முதுமையில் செய்யலாம் என இருக்காமல் இப்போதே அறம் செய்க என்கிறார் பெரியவர்.

Source

 
navigate_next
திருமந்திரத்தில் அறம்

இந்து மதம் என்பது பண்டை இந்தியாவில் தோன்றிய சைவம், சமணம், சாக்தம், வைஷ்ணவம் ஆகிய மதங்களை உள்ளடக்கிய ஒன்றாகப் பெயர்பெற்றுள்ளது. இந்தியாவில் உள்ள மதப்பிரிவுகளை ஒன்றாக உள்ளடக்கிக் கொடுக்கப்பட்டுள்ள ஒரு பெயராகவே வழங்கப்படுகின்றது. இந்து மதம் எப்போ தொடங்கியது, யாரால் தொடங்கப்பட்டது என்னும் வினாக்களுக்கு விடைகாணமுடியாத உலகில் முதல் தோன்றிய மதம் இந்து மதம் ஆகும். சில வரையறைகளுக்குள் நின்று கொண்டு அந்த வரையறைகளே மதம் எனக் கொள்ளும் மதங்களை விட இந்துமதம் வாழ்வியல், வாழ்க்கை நெறி என்ற அடிப்படையிலே அமைந்த ஒன்று. மதக் கட்டுப்பாடு என்ற அடிப்படையிலே வரையறைக்குள் நின்று கொண்டு இறுக்கமாகப் பின்பற்றுகின்ற நிலை இந்துமதத்தில் இல்லை. இந்துமதம் தன்னை ஒரு வரையறைக்குள் கட்டுப்படுத்திக் கொள்ளவில்லை. மாறாக நெகிழ்வும், பரந்த தன்மையும் கொண்டது. நல்லன வெல்லாம் எல்லாத் திசைகளிலிருந்தும் உலகை வந்தடைகின்றன என்ற தன்மையைக் கொண்டுள்ளது.

 

திருமூலர் காட்டும் வாழ்வியல் அறத்தொடு வாழ்தல் என்பதாகும். திருவள்ளுவர் காட்டும் வாழ்வியல் தத்துவத்தை ஒத்ததே திருமூலரின் ;திருமந்திரம். 


துன்பங்களைக் கழைதல்


தெளிவு தருவது நிறைமொழி – மந்திரம். அதனைச் சிந்தித்துச் செயலாக்கும் பொழுது தெளிவு வாழ்வுக்கு அழகையும் தருவதால் மந்திரம் - திருமந்திரம் எனப் போற்றப்படுகிறது. தமிழிலே தெளிவையும் அழகையும் தரும் மூவாயிரம் பாடல்களைத் திருமூலர் பாடிச் செல்ல அந்தத் தொகுப்பு திருமந்திரம் என்னும் ஈடிணையில்லாப் பெருநூலாக இலங்கி சைவத்திருமுறையின் பத்தாவது திருமுறையாகவும் திகழ்கிறது.


சைவமும் தமிழும் மட்டுமல்ல மானிடம் மாண்புறும் வழிகள் சொல்லும் திருமந்திரத்தை இறையருளால் இயற்றிய திருமூலரின் குருபூசையினைச் சைவத்தமிழ் உலகு கொண்டாடுகையில் தமிழ் கூறு நல்லுலகு முழுவதும் திருமூலர் நினைவைப் போற்றி நிற்கின்றது – நிற்க வேண்டும்.


அறத்தொடு வாழ்தல்


அறுத்தன ஆறினும் ஆன்இனம் மேவி
அறத்தனர் ஐவரும் எண்ணிலி துன்பம்
ஓறத்தன வல்வினை ஒன்றல்ல வாழ்வை
வெறுத்தன ஈசனை வேண்டி நின்றானே


உயிர்கள் அத்துவாகின் வழியாக வினைகளை ஈட்டின. உடல். முதலிய ஐம்பொறிகளும் சுவை, நாற்றம், முதலிய புலன்களில் இணைந்து உயிருக்கு எண்ணற்ற துன்பங்களைத் தருந்தன. இத்தகைய துன்பங்கள் வாழ்வியலில் துன்பங்களையும் தேவதனையையும் தொடர்ந்த தந்தனன. இத்துன்ப சாகதரத்தில் ஆழ்ந்த ஏதுமற்ற வறியவன் இறைவனை வேண்டி நின்றான். வாழ்க்கையில் பற்றற்று வெறுப்புற்று இறைவனை இறைஞ்சும ;நிலையை திருமூலர் உணர்த்துகின்றார். அதிக துன்பம்இ கஷ்டம் வரும்போது இறைவனை நாடுவது இயல்பு என்பதனை எத்துணை தெளிவாக எடுத்துக்காட்டி எம்மைச்சிந்திக்கத் தூண்டுகின்றார். 


வன்னம் பதம் மந்திரம் தத்துவம் கலை புவனம் என்னும் ஆறுவழிகளாலும் - அத்துவாக்களாலும் - பசுத்தன்மையைப் பேணிஇ ஐம்புலன்களால் எண்ணற்ற துன்பத்தைத் தேடுகின்றோம். ஒன்றல்ல பல கொடிய வினைப்பயன்கள் வந்து வாழ்வை வருத்துகின்றது. இதனால் வெறுப்புற்ற மனதினராய் வாழ விருப்பற்று நிற்கின்றோம்.


எமது சக்தியால் இதனை மாற்ற இயலாது என்னும் நிலையில் இறைவனை வேண்டி நிற்கின்றோம். வேண்டுதல் புறத்தே பிறக்கின்றது. தோண்டுதல் - தேடுதல் அகத்தே பிறக்கின்றது. அதே அத்துவாக்களே இறைவன் தன்னை வெளிப்படுத்தும் வழியாகவும் உள்ளது என்ற மெய்யுணர்வு தோன்றுகையில் அதே அத்துவாக்களைப் பயன்படுத்தியே பொய் நின்று நீங்கி மெய்சார்ந்து வாழ்வில் அமைதியும் ஆனந்தமும் ஏற்படுகின்றது என்பது மெய்கண்டார் அனுபவம்.


திருமந்திரத்து இம் மந்திரப் பொருள் அன்றைய மனிதனும் இன்றைய மனிதனும் நாளைய மனிதனும் ஓரே மனிதத்தன்மையைத் தான் கொண்டுள்ளோம். எங்களின் புறம் மாறலாம் வளரலாம் விஞ்ஞானமயமாகலாம். பூகோளமயமாகலாம். ஆனால் மனிதன் மாறவில்லை – மாறவும் முடியாது. மானிடம் என்றும் மானிடமாகவே இருக்கும். ஆசைகளும் தேவைகளும் மானிடத்தின் இயல்பு. அதனை வென்றிட வழி காட்டுவது தெய்வீகத்தின் இயல்பு.


மானிடமும் தெய்வீகமும் கொண்டது ஆன்மா. அதனை ஆன்மா உணரும் பொழுது அந்த உயிரின் சொல் செயல் சிந்தனை தெய்வீகமானதாக மாறும். அத்தகைய தெய்வீகத் தன்மையுள்ளவரே திருமூலர். இந்நிலை எய்தப் பெற்றவரைச் சித்தர் என்பாரும் உளர். இதனால் திருமூலர் சித்தர் என்றும் போற்றப்படுகின்றார்.


சித்தர் ஆயினும் முத்தர் ஆயினும் இறைவனுக்குப் பக்தர் ஆகி நிற்கின்ற பொழுதே அவர்களின் முழுஆற்றலும் அறிவும் அகிலத்திற்குப் பயன் அளிக்கும் என்பது நம் முன்னோர் கருத்து. காரணம் வினையினை கழிக்க வந்த உயிர் வினையின் ஆட்சிக்குள் தான் நிற்குமே தவிர அதனைக் கடந்து செல்லும் வலிமை அதற்கு ஏற்பட முடியாது. அந்த வினையினைக் கடந்து விதியினை மாற்றும் மதியினைத் தந்திடும் ஆற்றல் இறைவன் ஒருவனுக்கே தான் உண்டென்பது நம்முன்னோர் சொன்ன உறுதி மொழி. இந்த இறைசிந்தனையே அன்றும் இன்றும் என்றும் மானிடம் பயன் பெறு வழியுமாகும். திருமூலரின் திருமந்திர மொழியும் இதுவே.


மனிதர்களாகிய நாம் எழுத்து (வன்னம்) கருத்து (பதம்) நிறைவான மொழி (மந்திரம்) மெய்மைகளின் விளக்கம் (தத்துவம்) அறியும் வெளிப்படுத்தல் திறன் (கலை) உலக அனுபவப்படுத்தல் (புவனம்) இவைகளின் வழி நாங்கள் எம் சுயத்தைக் கட்டிப்போடுகின்றோம்.


இந்த நம்மைப் பந்தத்தில் (கட்டிப்போடுதல்) என்பது பசுவைக் கொண்டு போய் மாட்டுத் தொழுவத்தில் கட்டுதல் போன்ற செயல். இதனாலேயே உயிர் என்றாலே பசு என்னும் அழகான உவமானம் பெற்றது. பதி இறைவன் உயிர் பசு. உலகம் பாசம். இது நம்முன்னோர்கள் இறைவன் உயிர் உலகம் என்னும் என்றும் உள்ள முப்பொருள்கள் பற்றி சொன்ன விளக்கம்.


பதி நிலையானது. பசு தளையால் கட்டுண்டது. உலகம் மாறுவது – மாயமானது. எந்த ஒன்று முன் ஒரு கணத்தில் இருந்தது போல் அடுத்த கணத்தில் இல்லாது மாறிக்கொண்டிருக்கிறதோ அத மாயை. இதனை இயங்கியல் தன்மை என்பர்.


நிலையான பதி. இயங்கும் தன்மையான உலகம். இரண்டுக்கும் நடுவே தன் வினைகளால் கட்டுண்ட நிலையில் உயிர். உயிர் உலகினைக் காண்கின்றது. பதியைக் காணவில்லை. கண்டதையே உண்மையென நினைக்கையில் மயக்கம். உயிர் மயங்குகிறது. ஆன்மா சார்ந்ததன் வண்ணமாகிறது. மாறுவன மாறுகிறது. மாயையில் உயிர் தவிக்கின்றது. நிலையானது எதுவோ அதில் சார்ந்தாலே தனக்கு அமைதி எனப் பகுத்தறிகிறது. ஆந்த நிலையானதைப் பதியை இறைவனைத் தேடுகிறது .தன்னிலும் மேலானது அது என உணர்கையில் அதன் வழிப்பட முயல்கிறது. அதனைத் தொடரவென அதைத் தொழுகிறது. வழிபாடு பிறக்கிறது. வழிபட்டதன் வழி நடக்கையில் வாழ்க்கை சிறக்கிறது.


வழிபட்டதை உணர இயலாமால் வழி தெரியாது நிற்கையில் வாழ்க்கை அழிகிறது. வெறுப்பு விளைகிறது. இதனாலேயே மாணிக்கவாசகப் பெருமான் 'சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார் - செல்வச் சிவபுரத்தின் உள்ளார் சிவனடிக்கீழ்' என்றார். இறந்த பின் அல்ல இருக்கின்ற பொழுதே சிவானந்தப் பேரின்பத்தில் திளைக்க வைப்பது சொல்லும் பாட்டின் பொருளுணர்ந்து இறைவனைத் தொழுதல் என்பது திருவாதவூரர் திருவார்த்தைகள்.


வழிபடு பொருளை உணர்ந்து வழிபடுவதும் - மற்றவர்கள் உணர்ந்து வழிபட வைத்தலுமே பூசைகளில் எல்லாம் சிறந்த பூசை என்பது அருணந்தி சிவாச்சாரியாரின் சிவஞானசித்தியார் தரு விளக்கம். 'ஞானநூல் தனை ஓதல் ஓதுவித்தல் - நல்பொருளைக் கேட்பித்தல் தான் கேட்டல் நன்றா - ஈனமில்லாப் பொருள் அதனைச் சிந்தித்தல் ஐந்தும் - இறைவன் அடி அடைவிக்கும் எழில் ஞானப் பூசை' என்பது சிவஞானசித்தியார் சுபக்க 275வது பாடல் வரிகள். இதனையே திருமூலர்


பின்னை நின்று என்னே பிறவி பெறுவது
முன்னை நன்றாக முயல்தவம் செய்கிலர்
என்னை நன்றாக இறைவன் படைத்தனன்
தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே


எனப்பாடி பிறவிகள் தொடர்வதற்கு முயல் தவம் செய்யாமை காரணம் என்பதை விளக்கிக் கூடவே இறைவனைத் தமிழால் வெளிப்படுத்துவதும் பெருந்தவமே என்பதையும் கூறி தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே தன்னை இறைவன் தோற்றுவித்தான் என்பதையும் எடுத்து விளக்குகின்றார். இங்கு முயல் தவம் என்பது தவத்தை வாழ்வில் நின்று வேறான ஒன்றாகக் கருதாது வாழ்வையே தவமாகக் கொள்ளும் பெருநிலையை உணர்த்துகிறது. இதனை விளக்கும் மொழியாகவே


யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்
வான்பற்றி நின்ற மறைப்பொருள் சொல்லிடின்
ஊன்பற்றி நின்ற உணர்வுறு மந்திரம்
தான் பற்றிப்பற்றத் தலைப்படும் தானே

 

எனத் திருமூலர் பாடினார்.

 

அந்த வகையில் திருமந்திரம் தவமொழி மட்டுமல்ல வாழ்வு தருமொழி. நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்னும் உணர்வுடன் மக்களைச் செயல்பட வைக்கும் அழைப்பு மொழி. ஊன் பற்றி நின்று உணர்வினை உயிர்ப்பிக்கும் இத்திருமந்திரத்தைப் பற்றப் பற்றப் தலைவனாம் இறைவனின் தரிசனம் அதன் வழி காணப்பெறும் என உறுதி தருமொழி. துன்பக் கடல் கடக்க உதவும் அறிவுத் தோணி. தானமும் தவமும் கொண்டே வினைக்கடல் வென்று அருட்கடல் புகலாம் என வழி சொன்னது திருமந்திரம்

 

திளைக்கும் வினைக்கடல் தீர்வுறு தோணி
இளைப்பினை நீக்கும் இருவழி உண்டு
கிளைக்கும் தனக்கும் அக்கேடில் புகழோன்
விளைக்குந் தவம் அறம் மேற்றுணையாமே.

 

நாம் வினைக்கடலில் தவித்துக் கொண்டிருக்கின்றோம். அதனை நம் வாழ்வு என்று நம்பிக்கொண்டிருக்கிறோம். இந்த வினைக்கடலைக் கடக்கத் தோணிகளாக – துன்பக் களைப்பை நீக்கும் இருவழிகள் உள. நமக்கும் நம் சுற்றத்தவர்க்கும் குற்றமற்ற தன்மையையும் புகழையும் தரும் தவம் அறம் என்பவற்றை மேற்கொள்ளுதலே அவ்வழிகள்.

 

இதில் தவம் என்பது உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை அற்றே தவத்திற் குரு என்று வள்ளுவர் விளக்குகின்றார். எனக்கு வந்த துன்பத்தைத் கண்டு துவளாது துடிக்காது வெடிக்காது வேகாது புலம்பாது மனஉறுதியுடன் அதனை ஏற்று அதனை மாற்ற முயல்தலும் எந்த உயிர்க்கும் துன்பம் செய்யாப் பெருவாழ்வுமே தவம் என்பது குறள் பொருளாகிறது.

 

இவ்வாறு தன்னில் உறுதியும் பிறரில் உருக்கமும் கொள்கின்ற பொழுதே தன்னலத்தை வெல்லும் வாழ்வு வாழலாம். இது ஒரு தவநிலை இந்தத் தவநிலை குறித்து வள்ளுவர் மிக அழகான குறள் ஒன்று கூறுகிறார். 'தன்னுயிர் தானறப் பெற்றானை ஏனைய மன்னுயி ரெல்லாந் தொழும்' என்பதே அக்குறள். இந்நிலை வருவதற்கு இறையாணை வழி நடத்தல் வேண்டும். இறையாணையே அறம்.

 

அந்தணர் என்போர் அறவோர் மற்றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுகலான்

 

என நீத்தார் பெருமையில் அந்தணர் என்போர் அறவோர் - அவர்கள் எல்லா உயிர்கள் மேலும் சிறப்பான கருணை கொண்டு அவைகள் வாழ்வினைப் பேணி நிற்றலால் என அறவோர் என்பவர்க்கு வரைவிலக்கணம் வகுத்து விட்டே வள்ளுவர் அடுத்தாக அறன் வலியுறுத்தலை தொடங்கி

 

சிறப்பீனும் செல்வமும் ஈனும் அற்த்தினூங்கு
ஆக்கம் எவனோ உயிர்க்கு

 

எனச் சிறப்பையும் நிறைவையும் தருகின்ற அறத்தினை விட வேறு என்ன உறுதுணை உயிர்க்கு உளது? எனக் கேள்வி எழுப்புகின்றார்.

 

செந்தண்மை பூண்டொழுகல் என்பது இறைவன் ஒவ்வொரு உயிர்க்கும் கொடுத்த இயற்கையான ஆற்றலைப் பேணுதலும் அந்த ஆற்றலைப் பயன்படுத்தி உயிர் வாழ்தலை அனுமதித்தலும் எனலாம்.

 

இதனையே அரசியல் மொழியில் சுதந்திரம் என்பர். இந்த சுதந்திரம் மனிதனின் பிரிக்க முடியாத உரிமை என்பது ஐக்கிய நாடுகள் மனித உரிமைச் சாசன மொழி. ஆனால் திருக்குறள் முதல் திருமூலர் வரை இந்தச் சுதந்திரம் மனிதர்களுக்கு மட்டும் அல்ல எல்லா உயிர்க்கும் அனுமதிக்கப்படல் வேண்டுமெனக் கோருவது நம்தமிழ்ச் சிறப்பு.

 

இந்த வகையில் தான் இந்தச் சுதந்திரத்தை இறையாணை என்றனர் நம்முன்னோர். அந்த இறையாணையை ஏற்று வாழ்தலே அறம். இவ்வாறு தன்னலமறுப்பு என்னும் தவத்தையும் உயிர்நலச் சிறப்பு என்னும் அறத்தையும் பழக்கப்படுத்தி வழக்கப்படுத்துதலே வாழ்வை துன்பமில்லா இன்பப்பெருவாழ்வு ஆக்குவதற்கான வழி என்பது திருமூலர் மொழி.

 

இந்த தவத்தையும் அறத்தையும் விளங்கிக் கொள்ள இயலாதவர்களுக்கு அதனை கடைப்பிடிப்பதற்கானச் சுருக்க வழி ஒன்றையும் திருமூலர் பின்வரும் திருமந்திரத்தால் வகுத்துத் தருகிறார்.

 

பற்றது வாய்க்கின்ற பற்றினைப் பார்மிசை
அற்றம் உரையான் அறநெறிக்கு அல்லது
உற்று உங்களால் ஒன்றும் ஈந்தது வேதுணை
மற்று அண்ணல் வைத்த வழி கொள்ளுமாறே

 

என்பது உய்விற்கான சுருக்க வழி சொல்லு திருமந்திரம். அதன் விளக்கம் - 'உயிர்பற்றாக உள்ள பரம்பொருளை வாய்க்கு வந்தபடி எல்லாம் குறைகள் சொல்லாது – அறநெறி அல்லாத வேறு வழிகளில் சென்று மீட்சி பெறலாம் என எண்ணாது - மற்றவர்களுக்கு உங்களால் இயன்றதை ஈதலே வாழ்வின் பலமாகும் ஆன்மாவின் துணையாகும். இதுவே உயர்ந்தவனாகிய இறைவன் ஆன்மாக்கள் உய்வுற்று வீடடைய வைத்துள்ள வழி' என்பதாகிறது.

 

இங்கு ஈதல் என்பது அருட்கொடை அன்புக்கொடை அறிவுக்கொடை நிதிக்கொடை பொருட்கொடை உணர்வுக்கொடை உழைப்புக்கொடை உண்டிக் கொடை உயிர்க்கொடை எனப்பலவாறாக அமைகிறது. சுருக்கமாகச் சொன்னால் கொடுத்தல் - பகிர்தல் என்பன தன்னலமறுப்பினை ஆணிவேராகக் கொண்ட செயற்பாடுகள்.

 

இன்றைய காலகட்டத்தில் எம் இனத்தின் இன்மைகள் போக்கி நன்மைகள் செய்ய இந்தக் கொடுத்தல் - பகிர்தல் என்பதே ஒரே வழி.

 

யாவர்க்குமாம் இறைவற்கு ஒரு பச்சிலை
யாவார்க்குமாம் பசுவுக்கு ஒரு வாயுறை
யாவர்க்குமாம் உண்ணும் போதொரு கைப்பிடி
யாவாரக்குமாம் பிறர்க்கு இன்னுரை தானே

 

என்னும் திருமந்திரம் இன்றைய காலகட்டத்தில் நாம் பிறர்க்கு உதவிடல் வேண்டும் என்பதைக் குறிக்கும் பெருமந்திரம்.

 

பச்சிலை கொண்டு பரமனைப் போற்றலாம். பச்சைப்புல் கொண்டு பசுவின் பசியாற்றலாம். அவ்வாறே ஒரு கைபிடிச் சோறு ஊட்டியே பசிப்பிணி போக்கலாமே. அதுவும் இல்லையேல் இன்னுரை கூறியே பிறர் துன்பம் ஆற்றலாமே.

 

ஏளிமையான மொழியில் நாம் வாழவும் பிறரை வாழவைக்கவும் ஆண்டவன் தரும் அழைப்பாக இதனை ஏற்றுத் துன்புற்று நிற்கும் நம்மக்களுக்கு அன்புற்றுப் பணி செய்ய இத் திருமந்திரம் அழைக்கிறது. தானமும் தருமமும் தள்ளிவைக்கப்படாது செய்யப்பட வேண்டிய மனிதப்பணிகள். அதனைச் செய்தலே அறம். அதனைச் செய்தலே தவம். அறவழியான தன்னலமற்ற வாழ்வே அன்புற்றமர்தல். அறமே இறைவனை நாம் தாங்குவதற்கான வழி. அன்பே இறைவன் எம்மைத் தாங்கவைப்பதற்கான வழி.

 

அறத்தின் சின்னமாகிய விடை மேல் இறைவன் எழுவது அறத்தாலேயே அவனை அடைய முடியும் என்பதைக் காட்டுகிறது. அதேபோல் தேவர்க்கும் பிரம்மா திருமாலுக்கும் இறைவனின் திருவடியை மானிடர்க்கு அருளுவது அவன் அன்பென்னும் வலையில் மட்டுமே அகப்படுவான் என்பதைக் காட்டுகிறது.

 

இதனையே அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிகிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிகிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிந்த பின்
அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே
என்னும் திருமந்திரத்தின் மூலமந்திரமாக ஒலிக்கிறது.

 

இந்த தன்லமற்ற அன்பு – நன்மைத்தனமே செய்தல் என்னும் சிவத்தன்மை - இதனை அறிவுறுத்தி வாழப்பழக்கி எம்மை வாழ்விக்கும் பேராற்றலே திருமந்திரம். திருமந்திரம் தரும் மூச்சுப் பயிற்சி எம் உடலுக்கும் உள்ளத்திற்கும் உறுதி தருகிறது. நோய்நொடியின்றி நூறாண்டு காணவைக்கிறது.

 

திருமந்திரம் தரும் காட்சிப்பயிற்சி – தியானப் பயிற்சி ஒன்றாயும் வேறாயும் உடனாயும் இருக்கும் இறைவனையும் இறைவல்லமைகளையும் காணவும் பெறவும் வைக்கிறது. இதுவே திருமந்திரத்தின் பெருமை.

 

'மறுப்பது உடல்நோய் மருந்தென லாகும்
மறுப்பது உளநோய் மருந்தெனச் சாலும்
மறுப்பது இனிநோய் வாரா திருக்க
மறுப்பது சாவை மருந்தென லாமே' - திருமந்திரம்.


சித்த மருத்துவச் செயல்முறை விதிகள்

கற்பம்

 

'கற்பம்' உடலைக் காக்கும். உற்ற நோயை அகற்றும். அதுஇ உடலைக் கற்போல மாற்றும். கற்பம் உண்பவர் நீண்டநாள் வாழ்வார் என்றும் நோயற்ற நிலையடையலாம் என்பதும் மருத்துவ வழக்காக இருக்கிறது. உலக மருத்துவம் எதிலும் காணப்படாத அரிய முறை இது.

 

'அஞ்சு யுகத்தில் அழியாமல் காயந்தான்
மிஞ்சிய கற்பம் விளம்பினோம் நூற்றெட்டுத்
தஞ்ச முறவே தாந்தின்ன வல்லோர்க்கு
பஞ்சு நரைபோய்ப் பதிந்தோங்கி வாழ்வரே' - திருமந்திரம். செய்.

 

'அறம்இ பொருள்இ இன்பம், வீடு' என்பன மனிதப்பிறவியின் நாற்பயன்கள் என்பர் முற்றும் உணர்ந்த ஞானிகள்.இவற்றுள்இ அறம் என்பது மனத்துக்கண் மாசு இன்றி, அழுக்காறும், அவாவும் வெகுளியும் இன்னாச் சொல்லும் இல்லாராய் வாழ்வதாகும்.

 

பொருள் என்பத, தீது இன்ற, அறவழி நின்று உழைத்து ஈட்டுவதாகும். இன்பம் காதல் மனையாளும் காதலனும் உள்ளம் ஒன்றி, பாசத்தால் பிணைந்து, கண்டும் கேட்டும் உண்டும் உயிர்த்தும் உற்றும் உணரும் அய்ம்புல இன்பமும் செம்மையின் துய்ப்பதாகும். ஆனால், வீடு என்பது யாது?

 

இது, சிந்தையும் மொழியும் செல்லாத நிலையான தாகும் என்பர். இதனைக் கண்டவர் விண்டிலர்! விண்டவர் கண்டிலர்!

 

என்ன வியப்பு? ஒன்றினைப் பார்த்தவர், அது பற்றிப் பிறர்க்குப்பகராது இருக்கலாம். அது, அவர்களது விருப்பம், ஆனால் அதுபற்றிப் பேசுபவர்கள் அதனைப் பார்க்காதவர்கள் - பார்த்து அறியாதவர்கள் என்றால் பொருந்துமா? அறமாகுமா? பார்க்காத ஒன்றைப் பார்த்ததாகப் பேசி உலகை மயங்க வைக்கலாமா?

 

எனவேதான், நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்ற கருத்தின் தந்தையாகிய திருமூலர் வான் அல்லது வீடு பற்றிய அந்தரங்கத்தை வான் பற்றி நின்ற மறை பொருளைச் சொல்லுகின்றேன்; வெளிப்படுத்தி விடுகின்றேன்! என்று முழங்குகின்றார்.

 

ஆம்! அதன் உண்மைதான் என்ன?

 

அதுஇ ஊன் பற்றி நின்ற உணர்வு மந்திரத்தைத் தான் பற்றப் பற்றத் தலைப்படும் - தானாகவே தெளிவுறும் என்கின்றார்.

 

'நான் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம்!
வான்பற்றி நின்ற மறைபொருள் சொல்குவன்!
ஊன் பற்றி நின்ற உணர்வுறு மந்திரம்!
தான் பற்றப் பற்றத் தலைப்படும் தானே!'


என்பது திருமூலம்.

அப்படியானால் அந்த ஊன் பற்றி நின்ற உணர்வுறு மந்திரம் யாது!

 

ஒருவரது உடல் நீண்ட நெடுங்காலம் வாழ்வதற்கு ஏற்றதாய் - நலமாக - வளமாக இல்லை என்றால, அந்த உடலில்இ அந்த உடலில் உள்ள உயிர் தெளிவுற்று இன்புறுதற்குக் காரணமான ஞானத்தை - அறிவு நலத்தைப் பெறுதல் இயலாது எனவே, உடம்பை வளர்த்த, உயிரை வளர்த்து உயர்ஞானம் சேர்தல் வேண்டும்! என்கின்றார்.

 

ஆம்! நீடிய நல்வாழ்வு உற்ற உடலும்இ அதன் துணையால் தேடிய மெய்யுணர்வும் அந்த உணர்வால் உவந்து வாழும் உயர் வாழ்வுதான். வான் பற்றி நின்ற நிலையாகும் என்று உணர்தல் வேண்டும்.

 

இந்த உண்மையைத் திருமூலர் மற்றுமொரு பாடலிலும் அருளி இருப்பது - தெளிவுபடுத்தி இருப்பது காணலாம்.

 

அதில்இ யாதும் ஊரே! யாவரும் கேளிர்; பிறப்பு ஒக்கும் எல்லா உயிர்க்கும், மக்கள் அனைவரும் பிறப்பால் சமமானவர்களே! என்ற சிறப்பினை உணர்க அது போன்றேஇ ஆயிரம் ஆயிரம் தெய்வங்கள் உண்டு என்று அலையும் அறியாமையை விடுக! என்று தெளிவுபடுத்தி இருக்கின்றார்.

 

ஆம்; அதில் வந்துள்ளஇ ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்! என்னும் தொடரை நன்றாக நினைத்துப் பாருங்கள்! சிந்தித்து உணருங்கள்! எண்ணற்ற மதங்களையும் சமய நெறிகளையும் கற்பித்துக் கொண்டு வீணே அலைந்து அலைந்து அழியாதீர்கள்! என்ற கருத்தினைத் திருத்தமுற அறிவிக்கின்றதன்றோ?

 

மேலும், இதனினும் தெளிவாக, நீண்ட நெடுங் காலம் வாழ்வதற்கு தடையாக நமன் காலன் என்று ஒன்று உள்ளதே! என்றும் அதற்கு யாது செய்குவோம்? என்றும் திகைக்காதீர்கள்! நமன் இல்லை கூற்றுவன் என்ற ஒன்று தனியாக இல்லை. தோன்றல், வாழ்தல், அழிதல், (மறைதல்) என்பது இயற்கையே யாகும் என்பதையும் தெளிவுபடுத்துகின்றார்.

 

அதுமட்டுமின்றிஇ இக்கூற்றன் இல்லை என்றாலும் சென்றே புகும் கதி ஒன்று உள்ளதே! அங்கு நுழையும் வழியாதோ? என்றும் மயங்காதீர்கள்! வான் பற்றி நின்றஇ சென்றே புகும்கதி என்பது இல்லைஇ உலகில் நின்று நிலை பெற்று இனிய வாழ்வுற்று மகிழ்வதுதான் அந்த சென்றே புகும் கதி! என்று உணருங்கள்! உணர்ந்துஇ சிந்தித்துஇ நல்வாழ்வு பெறுங்கள்! என்றும் விளக்குகின்றார்.

அந்த அரியஇ இனிய பாடலைப் பாருங்கள்!

 

ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் 
நன்றே நினைமின் நமன் இல்லை நாளுமே!
சென்றே புகும்கதி இலலைநும் சித்தத்து
நின்றே நிலைபெற நீர் நினைந்து ய்மினே!

 

ஆனால், திருமூலர் ஒருவனே தேவன்! என்று ஒரு கடவுளைப் பற்றிக் கூறுகின்றாரே! - என்று தயங்கத் தேவையில்லைஇ கடவுளை சிவம் என்ற சொல்லால் குறிப்பிடும் அவர்இ இச் சிவம் என்ற சொல்லுக்கு அன்பு என்றே பொருள் கொள்

ளுகின்றார்.

அன்பு வேறு, சிவம் வேறு என்று கருதாதீர்கள்! அப்படி அது வேறு, இது வேறு என்பவர் அறிவில்லாத வர்கள்! என்று தெளிவாகக் கூறுகின்றார்.

 

அன்பும் சிவமும் இரண்டு என்பர் அறிவில்லார்
அன்பும் சிவமும் ஒன்றாதல் அறிகிலார்
அன்பும் சிவமும் ஒன்றாதல் அறிந்த பின்
அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே!

 

ஆம்; அன்பில்லாத வாழ்வு ஒரு வாழ்வாகுமா? அன்பும் அறமும் வாழ்வின் இரு கண்கள் அல்லவா? இதைவிட எப்படி தெளிவாகக் கூறமுடியும்?.

Source

 
navigate_next
வர்ணாசிரமம் ஆசிரமம் இரு பிறப்பாளர்

வர்ணாசிரமம்

 

வர்ணாசிரமம் என்பதன் பொருள், வர்ணம் என்பதற்கு சமுதாய மக்கள் செய்யும் தொழிலையும், ஆசிரமம் என்பதற்கு வாழும் வாழ்வியல் முறையை விளக்குவதே ஆகும்.

 

(வர்ணங்கள் ) சமசுகிருத சொல்லான வர்ணா என்ற சொல்லிற்கு அடைத்து வை என்று பொருள். வரலாற்றையொற்றி வழிவழியாய் வந்த கூற்றின்படி வர்ணமும், சாதியும் வெவ்வேறானவை. அவை ஒன்றொக்கொன்று தொடர்புடையவை அல்ல என்று கூறப்பட்டுள்ளது.



இந்து மக்களை அதன் இறையியல் கூற்றுப்படி மனிதனை குறிக்கும் புருஷா எனும் சொல் (ரிக் வேதக் 10.90 கூற்றுப்படி) மனிதர்களை நான்கு வர்ணங்களாக பிரிக்கின்றது. இவைகள் அவர்களின் தொழில் சமூகத்தைச் சார்ந்து தொழிலுக்கேற்ப வர்ணங்களாகப் பிரிக்கப்படுகின்றது.



இது பிறப்பினால் நிர்ணயிக்கப்படுவதில்லை என்றும் உதாரணத்திற்கு இராமாயணம் எழுதிய வால்மீகி பிறப்பினால் ஒரு வேடர் மற்றும் மீனவரான வேதவியாசர் மகாபாரதத்தையும் எழுதி, வேதங்களை தொகுத்தார் என்று கூறப்படுகின்றது. ஆகையால் அவரவர் அறிவுத்திறனாலும், தெய்வாதீனத்தாலும் முயல்பவர்கள் எவராயினும் மகரிஷி ஆகலாம் என்றும் கூறப்படுகின்றது

 

மனித வாழ்கையில் நான்கு ஆசிரமங்கள்

 

வேதாந்தக்காலத்திற்குப்பின் மனிதனின் வாழ்க்கை நிலை நான்காகப் பிரிக்கப்பட்டது.

 

  • 7 - 25 வயது - பிரம்மச்சர்யம்,
  • 25 - 50 வயது - கிரகஸ்தம்,
  • 50 முதல் வயது முதல் ஒய்வு காலம்- வனப் பிரஸ்தம் (காடுறை வாழ்வு),
  • அதன் பின் வாழ்பவர்கள் துறவறம் எனும் சந்நியாச வாழ்க்கை மேற்கொள்ளலாம். துறவறம் கட்டாயமில்லை.

வேதியர், சத்திரியர், வணிகர் மற்றும் சூத்திரர்

 

Source

 

இரு பிறப்பாளர்

 

" இரு மூன்று எய்திய இயல்பினின் வழாஅது - - - - - - 177
 இருவர்ச் சுட்டிய பல்வேறு தொல்குடி
 அறு நான்கு இரட்டி இளைமைநல் யாண்டு
 ஆறினில் கழிப்பிய அறன்நவில் கொள்கை - - - - - - 180
 மூன்றுவகைக் குறித்த முத்தீச் செல்வத்து
 இருபிறப்பாளர் பொழுது அறிந்து நுவல
 ஒன்பது கொண்ட மூன்றுபுரி நுண்ஞாண்
 புலராக் காழகம் புலர் உடீஇ
 உச்சிக்கூப்பிய கையினர் தற்புகழ்ந்து - - - - - - 185
 ஆறுஎழுத்து அடக்கிய அருமறைக் கேள்வி
 நாஇயல் மருங்கில் நவிலப் பாடி
 விரைஉறு நறுமலர் ஏந்தி பெரிதுஉவந்து
 ஏரகத்து உறைதலும் உரியன், அதான்று ..." - - - - - - 189



தெளிவுரை:



"['வேதம்' போன்ற நூல்களைக்] ஓதல் [கற்றல்], ஓதுவித்தல் [கற்பித்தல்], வேட்டல் [வேள்வி, அல்லது யாகம், செய்தல்], வேட்பித்தல் [ஏனையோரின் நன்மைக்காக வேள்வி செய்வித்தல்], ஏற்றல் [மற்றவர்களிடமிருந்து பொருளைத் தானமாகப் பெறுதல்], ஈதல் [மற்றவர்களுக்குப் பொருளைத் தானமாகக் கொடுத்து உதவுதல்] ஆகிய ஆறுவகைப் பணிகளையும் தவறாமல் நிறைவேற்றுபவர்களாகவும்; தாய்-தந்தையர் இருவரின் குடும்பமும் நல்ல குடும்பம் என உலகத்தாரால் மதிக்கப்பெற்ற பழம்பெரும் குடியில் தோன்றியவர்களாகவும்; தம் வாழ்நாளில் முதலாவது நாற்பத்தெட்டு ஆண்டுகள் அடங்கிய இளமைக் காலம் முழுவதும் 'பிரமச்சரியம்' எனப்படும் திருமணமாகாத வாழ்வியலை மேற்கொள்பவர்களாகவும்; அறம் பொருந்திய கோட்பாட்டினை உடையவர்களாகவும்; 'ஆகவனீயம், தக்கிணாக்கினியம், காருகபத்தியம்' எனப்படும் மூவகைத் தீயால் வேள்வி செய்து பெறும் செல்வத்தை உடையவர்களாகவும்; இவ்வுலகில் [தம் தாயின் வயிற்றிலிருந்து] இயற்கையாகப் பிறக்கும் பிறப்போடு, கல்வியறிவு, அறிவு முதிர்ச்சி ஆகியவற்றை எய்திய பிறகு 'மீண்டும் பிறத்தலால்' 'இரு பிறப்பாளர்' என அழைக்கப்படுபவர்களாகவும்; ஒவ்வொரு நாளுக்கும் உரிய நல்ல நேரத்தை கணித்து மற்றவர்களுக்குத் தெரிவிப்பவர்களாகவும்; [ஒவ்வொரு புரியிலும்] மூன்று நூல் இழைகளைத்கொண்ட புரிகள் மூன்றால் ஆகிய ஒன்பது நூலிழைகளைக் கொண்ட பூணூலை அணிபவர்களாகவும்; நீராடிய பின்னர் உலராத ஆடையையே அணிந்து ஈரமான அந்த ஆடை உலரும்படிச் செய்பவர்களாகவும்; தலை உச்சி மீது தங்கள் இரு கைகளையும் குவித்து இறைவனை வணங்குபவர்களாகவும்; 'சரவணபவ', அல்லது 'குமாராயநம' என்னும் ஆறெழுத்து மந்திரத்தைச் சொல்லி, தம் நாவினால் மென்மையாகவும் இனிமையாகவும் பாடி நறுமணமுடைய மலர்களைத் தூவி திருமுருகப்பெருமானை வழிபடுபவர்களாகவும் விளங்கும் அந்தணர்கள் வாழ்ந்துவரும் திரு ஏரகத்திலும் திருமுருகப்பெருமான் மனமகிழ்வோடு அமர்ந்திருக்கும் உரிமை உடையவன், அதுமட்டுமன்று ..."



அரும்பத அகராதி:



இருமூன்று எய்திய இயல்பு = 'ஓதல், ஓதுவித்தல், வேட்டல்,
        வேட்பித்தல், ஏற்றல், ஈதல்'. ஆகிய அறுவகைப் பணிகளை
        நிறைவேற்றும் பண்பு;
இருவர்ச்சுட்டிய = தாயும், தந்தையும் ஆகிய இருவரின் குலத்தின்,
        அல்லது குடும்பத்தின் நற்பெயரைப் புகழ்ந்து கூறிய;
அறு-நான்கு இரட்டி இளமை நல் யாண்டு = 6x4 + 6x4 = 48
        ஆண்டுகள் அடங்கிய இளமைக் காலம்;
முத்தீ = 'ஆகவனீயம், தக்கிணாக்கினியம், காருகபத்தியம்' என்னும்
        மூவகை வேள்வித் தீ;
இருபிறப்பாளர் = இயற்கைப் பிறப்பு, அறிவு முதிர்ச்சியின் பின்னர்
        எய்தும் மறு பிறப்பு ஆகிய இரு பிறப்புகளுக்குரிய அந்தணர்கள்;
பொழுது அறிந்து நுவல = நல்ல நேரத்தை கணித்துத் தெரிவிக்க;
ஒன்பதுகொண்ட மூன்று புரி நுண்ஞாண் = [ஒவ்வொரு புரியிலும்
        மூன்று இழைகளைக்கொண்ட] மூன்று புரிகளாலாகிய ஒன்பது
        இழைகளைக்கொண்ட பூணூல்;
புலராக் காழகம் புலர உடீஇ = உலராத ஆடையை உலரும்படி
        உடுத்தி;
உச்சிக்கூப்பிய கையினர் = தலை உச்சி மீது இரு கைகளையும்
        குவித்து வணங்குபவர்கள்;
ஆறு எழுத்து அடக்கிய அருமறைக் கேள்வி = 'சரவணபவ',
        அல்லது 'குமாராயநம' என்னும் ஆறு எழுத்துகள் அடங்கிய மந்திரம்;
'விரைவுறு நறுமலர் ஏந்தி = நறுமணம் உடைய மலர்களைத் தூவி;
பெரிது உவந்து = மிகவும் மகிழ்ந்து;
ஏரகத்து உறைதலும் உரியன் = திரு ஏரகத்தில் அமர்ந்திருக்கும்
        உரிமையுடைய திருமுருகப்பெருமான்.

Source

 

சதுர்வர்ணம் என்றால் என்ன?

சதுர்வர்ணம் என்பதை நால் வர்ணம் என்பர்.

சதுர்வர்ணத்தில் அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் என வகைப்படுத்துவர். அஃதாவது, பிராம்மணர்,க்ஷத்திரியர், வைசியர், சூத்திரர் என்றும் நால்வகைக் குலம் என்றும் கூறலாம். ‘நெறிமுறை நால்வகை வருணமும் ஆயினை’ என்று திவ்யப் பிரபந்தம் கூறுகிறது.

வர்ணம் பற்றிய ஔவையார் பாடல்:

“நூல் எனிலோ கோல் சாயும், நுந்தமரேல் வெஞ்சமராம்
கோல் எனிலோ அங்கே குடி சாயும்- நாலாவான்
மந்திரியும் ஆவான் வழிக்குத் துணை ஆவான்
அந்த அரசே அரசு! ”

முப்புரி நூல் அணிந்த அந்தணர் அமைச்சராக அமைந்தால் அந்த அரசின் செங்கோல் சாய்ந்து விடும்.

உறவினரான அரச குலத்தவனான க்ஷத்திரியன் அமைச்சனானால், கொடிய போரினை மூட்டி விடுவார்கள்.

நாலாவது குலத்தவரான வேளாளனோ நல்ல அமைச்சராக இருப்பான், அரச நெறிக்கு உற்ற துணையாக விளங்குவான். அவனைத் துணையாகக் கொண்டதே, நல்லரசாகவும் இருக்கும்.

 

Source

 

கடன் கோடல் ஒருவர் எடுத்த காக்கும்படி வைத்த போதும் உடையவன் எல்லாம் விற்றல் கோடி லாபம் சம்பாதித்தது தானம் செய்த பொருளை கொடாமை
சம்பளம் கொடாமல் கட்டுப்பாட்டை மீறி நடந்தால் பொருளை விற்றாவது வாங்கியாவது பின்பு சந்தேகித்தல் மாட்டை உடையவனுக்கு மேய்ப்பவனும் வரும் வழக்கு எல்லை வழக்கு அடித்தல் திட்டம் திருட்டு அவன் செய்கை ஒருவன் மனைவியை அபகரித்தல்

 

Source

navigate_next
வழக்கு

https://sadhanandaswamigal.blogspot.com/2016/05/blog-post_23.html

 

சேக்கிழார் காட்டும் நீதி முறைமை

navigate_next
வரிசைக்கு வருந்தும் இப் பரிசில் வாழ்க்கை

புலவரின் இயல்பு


நெடுங்கிள்ளி, இளந்தத்தன் என்ற புலவரை ஒற்றன் எனக் கருதிக் கொல்ல முயன்றான். அப்போது கோவூர்கிழார் நெடுங்கிள்ளிக்குக் கூறிய அறிவுரைப் பாட்டு புலவர்கள் என்பார் யார்?' என்பதை உலகுக்குப் புரிய வைக்கும் உயர்ந்த கவிதை.

வள்ளியோர்ப் படர்ந்து புள்ளின் போகி
நெடிய என்னாது சுரம்பல கடந்து
வடியா நாவின் வல்லாங்குபாடிப்
பெற்றது மகிழ்ந்து சுற்றம் அருத்தி
ஓம்பாது உண்டு கூம்பாது வீசி
வரிசைக்கு வருந்தும் இப் பரிசில் வாழ்க்கை
பிறர்க்குத் தீது அறிந் தன்றோ , இன்றே !(47: 1-7)



(சுரம் = பாலை நிலங்கள்; ஓம்பாது = நாளைக்கு வேண்டுமே எனச்

சேமியாமல்; கூம்பாது = தன்னலத்தால் பொருளை இறுக்கிப் பிடிக்காமல் ;

வரிசை = தகுதியை அறிந்து தரும் பரிசு)

"தகுதி உடைய வள்ளலைத் தேர்ந்து, அவனது இருப்பிடம் நெடுந்தொலைவு என்றாலும் பழுத்த மரத்தை நாடும் பறவை போல், நீண்ட கொடிய பாலை நிலங்கள் பலவற்றைக் கடந்து செல்வோம். எவருக்கும் கீழ்ப்படாத நாவின் பொய்யில்லாத மொழிகளால் எங்கள் திறனுக்கு இயன்ற வரை பாடுவோம். கிடைத்ததற்கு மகிழ்வோம். பெரிய சுற்றத்தார் அனைவர்க்கும் உணவு தருவோம். நாளைக்கு வேண்டுமே என்று ஒதுக்கி வைக்காமல் உண்டு, பதுக்கி வைக்காமல் மற்றவர்க்கு வாரிக் கொடுத்து வாழுவோம். வள்ளலின் அவையில் கிடைக்கும் பொருளின் அளவுக்காக அல்ல, பரிசிலால் கலைத் திறமையை அளவிடும் மதிப்புக்காகத்தான் இவ்வளவு துன்பமும் படுகிறோம். அப்படிப்பட்ட பரிசில் வாழ்க்கையைக் கொண்ட எங்கள் புலவர் கூட்டம் அடுத்தவர்க்குத் தீங்கு என்பதை நினைத்தும் பார்த்ததுண்டா?” என்று பெருமிதத்துடன் கேட்கிறார் கோவூர் கிழார். "உன்னைப் போன்ற மன்னர்களும் எங்கள் புலவர் கூட்டத்தில் உள்ளனர்” என்றும் உணர்த்திப் புலவனைக் காப்பாற்றினார்.

 

Source

navigate_next
கற்பு

புராணங்கள் மற்றும் இதிகாசங்கள்  காட்டும் கற்பு:

ஜமதக்னி முனிவரின்  மனைவி ரேணுகா, பரசுராமரின் தாய்,  வானத்தில் சென்ற தேவேந்திரன் நிழல் கண்ட ரேணுகாவின் மனது ’தேவேந்திரனின் அழகினை வியந்த’ காரணத்தினால், கற்பிழந்ததாகக் காட்டப் படுகிறார். 
அருந்ததி( இந்துத் திருமணங்களில் அம்மி மிதித்தவுடன் காண்பிப்பார்களே)   மற்றும் பஞ்சகன்னிகைகள்  என்று , அழைக்கப்பெறுகின்ற கௌதம முனிவரின் மனைவி அகலிகை, பஞ்ச பாண்டவர்களின் மனைவி பாஞ்சாலி, இராமபிரானின் மனைவி சீதை, வாலியின் மனைவி தாரை, இராவணனின் மனைவி மண்டோதரி ஆகியோர் கற்பில் சிறந்தவர்களாகப் போற்றப் படுகிறார்கள் அத்திரி முனிவரின் மனைவி அனுசூயா  கடவுள்களான பிரமா, விஷ்ணு, சிவனைக் குழந்தையாக்கி , நிர்வாணமாக நின்று விருந்தோம்பியதாக புராணம் போற்றுகிறது.

ஐவரை மணந்த பாஞ்சாலி சிறந்த கற்புடையவள் எனப் போற்றப்படுகிறாள்.அவள் ஒரு சந்தர்ப்பத்தில் பாண்டவரைக் காணும் முன் கர்ணனிடம்  மனம் சபலப்பட்டதாக கிருஷ்ணர் கூறுவதாகவும் ஒரு கதை சொல்லப்படுகிறது. பாண்டவரைக் கூட குந்தியின் புத்திரர்களே என்றுதான் கூற வேண்டும். ஏனெனில் அவர்கள் பாண்டுவின் புத்திரர் அல்ல. பாண்டுவும், திருதராஷ்டிரனும் கூட தங்கள் தந்தைக்குப் பிறக்கவில்லை. அவர்களின் பாட்டன் சந்தனு மகாராஜாவின் மீனவ குல மனைவி மச்சகந்திக்கு பிறந்தவர்கள். மச்சகந்தி கூட அவர்களை சந்தனு மூலம் பெறவில்லை. அவளது முதல் தொடர்பான  பராசர் என்ற முனிவர் மூலம் பெற்றாள். அப்படி  பிறந்த வியாசருக்கும் பாண்டு, திருதராஷ்டிரனுடைய தாய் அம்பிகை , அம்பாலிகைக்கும் பிறந்தவர்களே பாண்டுவும், திருதராஷ்டிரனும். (ஐயோ,  கொல்றேனா? நான் இல்லை. நதி மூலம் ரிஷி மூலம் பார்க்காதீர்கள் என்பது இதுதான் ). இவர்கள் தவிர  தன் கணவனாகிய மௌத்கல்ய முனிவரைக் கூடையில் வைத்து தேவ தாசியிடம்  அழைத்து சென்ற நளன் மகள்  நளாயினி, சூரியனைக் கட்டி  நிறுத்தும் அளவுக்கு சிறந்த  பத்தினியாகப் போற்றப்பட்டவள். இப்படி புராணம் போற்றும் ’கற்பு’க்கரசிகள் பலர்.

இலக்கியங்களிலும் இலக்கணங்களிலும் தமிழர் கற்பு  

‘கற்பெனப்படுவது பிறர் நெஞ்சு புகாமை’ எனத் தொல்காப்பியம் இலக்கணம் வகுக்கிறது. பெண்கள் என்பவள் சிறந்த பண்புடன் விளங்க வேண்டும் என்பதை,
‘கற்பும் காமமும் நற்பால் ஒழுக்கமும்
மெல்லியற் பொறையும் நிறையும் வல்லிதின்
விருந்து புறந்தருதலும் சுற்றம் ஓம்பலும்
பிறவும் என்ன கிழவோள் மாண்புகள்’   என்றும் தொல்காப்பியம் சொல்கிறது.

கற்பு என்பது ஒரு நடைமுறை சித்தாந்தம் அல்லது கருத்தியல் என்பது ஒரு பார்வை. அன்றாட வாழ்க்கையில் செயல்படுத்தப்படும் ஒரு வாழ்க்கைநோக்கு. ஒழுக்கம் என்று ஒட்டுமொத்தமாக வரையறைப்படுத்தபட்டது  எனலாம். கருத்தியல் என்பது ஒரு மாறும் விடயமாகும். கருத்தியல் சார்ந்த நெறிமுறைகள்  எல்லாச் சமுதாயங்களிலும் ஒன்றுபோல் பின்பற்றப் படுவதில்லை.நெறிமுறைகளை வகுத்துக் கொள்வதில் சமுதாயங்கள்  வேறுபாடுகள் காட்டுகின்றன. அதன் இலக்கணம் காலத்துக்கு காலம், தலைமுறைக்குத்தலைமுறை, சாதிக்குச்சாதி, இடத்துக்கு இடம் மாறிக்கொண்டேதான் இருக்கும். ஒரு சமூகத்தின் அங்கீகரிக்கப்பட்ட ஒழுக்க நெறி இன்னொரு சமூகத்தில் மறுக்கப் பட்டதாக இருக்கும். அத்தனை பேரும் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒழுக்க நெறிகளைப் பேணுவது சாத்தியமல்ல.

ஆகவே கற்பு என்பது எப்போதும் ஒரு குறிப்பிட்ட சூழலில் ஒரு காலகட்டத்தில் பொதுவாக ஏற்கப்பட்ட ஒழுக்கநெறி என்று கொண்டால், குடும்பம் என்ற கட்டமைப்பை உருவாக்கி நிலைநாட்டுவதற்காக உருவாக்கப்பட்ட நெறி என்று அதைச்சொல்லலாம். குடும்பம் செயல்படுவதற்கு சாதகமாக இருப்பவை எல்லாமே கற்புதான் என்றே அது புரிந்து கொள்ளப் பட்டிருக்கலாம். ஆனால் எது எல்லா தரப்பினருக்கும் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒரே  நெறியாக அமைய வேண்டும் என்பது எப்படி சாத்தியப்படும்?

கற்பின் அர்த்தம் என்ன?

கற்பு என்ற வார்த்தை ‘கல்’  என்ற சொல்லிலிருந்து வந்ததாகும். ஞானம் , அறிவு போன்ற ஒத்த அர்த்தம் கொண்டது. நாலாயிரம் திவ்ய பிரபந்தத்தில் , ‘பெரிய திருமொழி’யில் திருமங்கை ஆழ்வார் 
‘ஆழி ஏந்திய கையனை, அந்தணர் கற்பினை கழுநீர் மலரும் வயல்
கண்ணமங்கையுள் கண்டு கொண்டேனே'. என்கிறார்.

இங்கு 'அந்தணர் கற்பு' என்றால் ‘சான்றோர் ஞானம்' என்ற பொருளில் வருகிறது.

‘கற்பெனப் படுவது கரணமொடு புணரக்
கொளற்குரிய மரபிற் கிழவன் கிழத்தியைக்
கொடைக்குரி மரபினோர் கொடுப்பக்கொள்வதுமே' என்கிறது  நச்சினார்க்கினியர் உரை தொல்காப்பியம்.
‘கொண்டானிற் சிறந்த தெய்வம் இன்றெனவும்,
அவனை இன்னவாறே வழிபடுகவெனவும் இருமுது குரவர் கற்பித்தலானும் ‘அந்தணர் திறத்துஞ் சான்றோர்தே எத்தும்’,
‘ஐயர் பாங்கினும் அமரர்ச்சுட்டியும் ஒழுகும் ஒழுக்கம் தலைமகன் கற்பித்தலானும் கற்பாயிற்று’ என்றும் ‘கற்றல்’ என்ற பொருளிலேயே கற்பு என்ற சொல் நச்சினார்க்கினியர் உரையில்  பயன்படுத்தப்பட்டுள்ளது.

திருவள்ளுவர் கற்பு என்பதற்குத் ’திண்மை’ என்று பொருள் பட

‘பெண்ணிற் பெருந்தக்க யாவுள கற்பென்னும்
திண்மை உண்டாகக் பெறின்’  என்ற குறளில் கூறுகிறார்.

‘சிறை காக்கும் காப்பு எவன் செய்யும்
நிறைகாக்கும் காப்பே தலை’  என்கிறது இன்னொரு குறள், மகளிரை சிறையில் வைத்துக் காக்கும் காவலால் பயன் இல்லை. அவர் தாமே கற்பு நெறியில் நின்று தம்மைக் காத்துக் கொள்வதே சிறந்தது என்பது இக்குறளின்  பொருளாகும்.

‘தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய் எனப் பெய்யும் மழை’   கணவனைத் தொழுபவளே கற்புடையவள் என்றும் ஒரு குறளில் கூறுகிறார்.

‘கற்பெனப்படுவது சொல் திறம்பாமை’  என்கிறது  கொன்றை வேந்தன். வார்த்தையில் உறுதியாக நிற்றல் என்று அர்த்தம்.

‘கற்பு என்பது கணவனிலும் தெய்வம் வேறில்லையென எண்ணிக் கலங்காது அவனை வழிபடுவது’ என்கிறது அபிதான சிந்தாமணி.

“நிறையில் காத்துப் பிறர்பிறர்க் காணாது
கொண்டோன் அல்லது தெய்வமும் பேணா
பெண்டிர் தம்குடி” (மணிமேகலை).

கற்பு நெறியில் தன்னைக் காத்துக்கொண்டு, பிறர் தன்னைக் காணாமலும், பிறரைத் தான் காணாமலும் வாழும் பெண்கள்; கணவனைத் தவிர பிற தெய்வத்தை வணங்காத பெண்கள் பத்தினிப் பெண்டிராவர் என்கிறது மணிமேகலை.

இவை நான் அறிந்த  சில உதாரணங்கள் தாம். மேலும் பல இலக்கண இலக்கியங்களை படித்து அவற்றை ஆய்வு  செய்து பிரித்து மேய்ந்து பொருள் சொல்லும் அளவுக்கு எனக்கு வயதும் ’டமில்’லும்  ஒத்துழைக்காது. 
ஆனாலும் என் சிற்றறிவுக்கு எட்டிய அளவில் இலக்கியங்கள், ஆண் பெண் இருவரும் காதலுக்குப்  பிறகு, இருவருடைய உறவையும் உறுதிப் படுத்த நிகழ்த்தும் சடங்கினையே  ‘கற்பு' என்கின்றன. நிறை என்ற சொல்லுக்குப் பொருளைப் பார்த்தால் அழிவின்மை, உறுதிப்பாடு, நூல்வழியும் சமூக மரபுப்படியும் பெறும் அறிவு என்கின்ற பொருள்களே காணப்படுகின்றன. 
பல இடங்களில் ‘கற்பு' மகளிர் நிறை என்று  பொருள்படவே காணப்படுகின்றது.ஆனால்  நிறை என்பது பெண்களையே குறிக்கும் பதமாக எந்தக் காலத்தில்  ஏன் எப்படி ஏற்பட்டது என்பது விளங்கவில்லை.

சங்ககாலத்தில் பெண்ணின் கற்பையும் மகளிர் உடல் ரீதியான ஒழுக்கத்தையும்  இணைத்துப்பார்க்கும் வழக்கம் இருந்ததாகவே தெரியவில்லை.  குல வழக்கப் படி, நல்ல நூல்களின் அறிவுரைப்படி திருமணம்செய்துகொள்பவள் கற்புடையவள் என்பதே என் புரிந்துணர்வு.
முதன் முதலில் ‘சிலப்பதிகார’ காலத்தில் தான் பதிவிரதா தன்மையும், கற்பும் பெண்ணைச் சார்ந்த அம்சங்கள் என அடையாளம் காட்டத் தொடங்கி வைக்கப் பட்டன. தன் கணவன் மரித்தவுடன் அவனைத் தொடர்ந்து உயிர்நீத்த பாண்டியன் மனைவி கதா பாத்திரம் சிலம்பில் இருந்தே தொடங்குகிறது எனலாம்

சேரன் செங்குட்டுவன் தான் பெண்களுடைய 'கற்பு 'ப் பற்றிய விவாதத்தை முதலில் தொடங்கி வைத்தவன் எனலாம்.அதன் பின் தான் மக்கள் கற்பு என்ற தலைப்பில் பட்டி(வெட்டி)  மன்றம் நடத்த தொடங்கினர்.

‘கற்பு நிலை என சொல்ல வந்தார்,இரு கட்சிக்கும் அஃது பொதுவில் வைப்போம்’  என்றார் மகாகவி பாரதி .இதுவே எனது உறுதியான் நிலைப்பாடாகும்.கற்பு என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவானது என்று புரிந்து கொள்ளவேண்டும் என்பது என் தாழ்மையான கருத்து. ஆண் எப்படி வேண்டியும் இருக்கலாம் என்றால் ,இந்திரன், சந்திரன், இராவணன்,  கிருஷ்ணன் இவர்களை எந்தப் பட்டியலில் சேர்ப்பீர்கள்? கடவுளர்களானால் கற்போடு( அப்படி ஒன்று நிரூபிக்கப் படும் பட்சத்தில்)  விளையாடலாமா? தசரதன், பாண்டு, போன்ற பலதார பிரியர்கள் எந்த வகையில் அடங்குவார்கள்?

ஆனால் காலம் மாறி விட்டது.ஆண்கள் கற்பிலிருந்து வெளிப்பட்டு  எங்களுக்கும் இந்த சமாச்சாரத்துக்கும் சம்பந்தம் இல்லை  என்று நிற்பது போன்றே இன்றைய பெண்களும் கற்பிலிருந்து – கற்பு கோட்பாட்டிலிருந்து விலகவே இன்றைய கால கட்டத்தில் விரும்புகிறார்கள். குறிப்பாக காதல் தோல்வி அடையும்போது கற்பு என்பதும் கேள்விக்குறியாகிறது நிதர்சனமாகும். எல்லா காதலும் நிறைவேறும் காதல் அல்ல.திருமண வாழ்க்கை இலகுவில் முறிந்து போகும் கால கட்டத்தில் இருக்கிறோம். திருமணத்துக்கு முன்பே சேர்ந்து வாழும் கலாச்சாரம் பரவி வருகிறது.(இது சங்க காலத்தில் இருந்த வழக்கமே- களவு எனப்பட்டது, களவினைச் சார்ந்தே கற்பு வந்தது 

ஆனாலும் கற்பு சமூகத்தின் உயரிய எல்லைக்கோடு என பலரால் கருதப் படுகிறது. அதை கடப்பவர் சிலரும்  உண்டு. அதைக் காப்பதாய் பாசாங்கு செய்பவர்களும் உண்டு.கற்பின்  நீதிபதி மனச்சாட்சி மட்டுமே  என்பது என் தாழ்மையான கருத்து. கற்பு என்பது உண்மையாக இருப்பது என்று எனக்கு அர்த்தமாகிறது. அது உண்மையாக இருப்பது - இரு தரப்பினரும் பேண வேண்டிய ஒழுக்கம் என்ற புரிதலே ஏற்படுகிறது.ஒருவர் அந்த ஒழுக்கத்தை மீறும் போது கற்பு அர்த்தமற்றதாகிறது என்பது என் கருத்து. அப்பாடி கற்பு பற்றி இப்படி ஒரு சற்றே பெரிய விளக்கத்தை மிக  ‘சுருக்கமாக’ச் சொல்லி விட்டேன்.

 

Source

navigate_next
Test
sa
navigate_next
New Content
உதாரணத்திற்கு மகா பாரத கதையை எடுத்துப் பார்ப்போமானால் பஞ்ச பாண்டவர்களில் தர்மத்தை நிலை நாட்டுவதற்காக அருச்சுனனை பகவான் ஏன் தேர்த்தெடுத்தார்?

தர்மர் தர்மத்தையே கடைப்பிடித்து தர்ம நெறியில் வாழ்பவர் வேறு எந்த விதமான எண்ணங்களுக்கும் இடம் கொடுக்காதவர் அதே போல பீமன் கோபக்காரர் அடுத்து நகுலன் உலகிலேயே தேஜஸ்  பொருந்தியவராகவும் , சகா தேவன் சாஸ்திரத்தில் தேர்ந்தவராகவும் காணப்பட்டார்கள். ஆனால் சகல விதமான குணங்களும் உள்ளவர்தான் அருச்சுனன்!

அதே போல அனைத்து விதமான தீய  எண்ணங்களின் இருப்பிடம்தான் கௌரவர்கள். அந்த தீய எண்ணங்கள் படைத்தவர்களை வெல்வதற்குரிய அஸ்திரங்கள் அருச்சுனனின் அம்புறாத்தூணியிலே காணப்படுகிறது! ஆக அருச்சுனனின்  அம்புறாத்தூணி போன்றதுதான் மனித மனம்; மனித மனமும் அனைத்து விதமான எண்ணங்களும் அலைக் கழிக்கும் இடம் ; முள்ளை முள்ளால் எடுப்பது போல தீய எண்ணங்களை வெல்ல அதற்கு தகுந்த அஸ்திரங்களை  வைத்திருப்பவர் அருச்சுனன்  மாத்திரமே. அதுதான் அவரை ஸ்ரீ கிருஷ்ணர் தேர்ந்தெடுத்து தர்மத்தை நிலை நாட்டினார்

அது போல பிரபலமான நகரில் கடைத் தொகுதி பல காணப்படும். அங்கே இராசாயன கடை, பழக் கடை, புடவைக் கடை, பல சரக்குக் கடை, இலத்திரனியல் கடை என பல விதமான கடைகள் காணப்படும். ஆக அங்கே வயலுக்கு விசிற கிருமி நாசினி தேவைப்பட்டால் விவசாயிகள் அவற்றை கொள்வனவு செய்வார்கள் உடைகள் தேவையாவர்கள் அவற்றை கொள்வனவு செய்வார்கள் இவ்வாறு எது எது தேவையோ அதனையே மக்கள் நுகர்வார்கள். தேவையானதை விடுத்து தேவையற்றதை நுகரமாட்டார்கள். அதே போலதான் மனம் எனும் பெரு வெளியில் தீய எண்ணங்கள் நல்லெண்ணங்கள் எனும் பெரும் கடைத் தொகுதி காணப்படுகிறது. ஆக நமக்கு தேவையான நல்லெண்ணங்களை ஈர்த்தெடுத்தால் தர்மவான்களாக வாழலாம் என்ற பேருண்மையும் புலப்படுகிறது.
  • All
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11