• 001-050
  • 051-100
  • 101-150
  • 151-200
  • 201-250
  • 251-300
  • 301-350
  • 351-400
  • 401-450
  • 451-500
  • 501-550
  • சித்தர் சிவ வாக்கியர் சரிதம்
  • Song
  • Audio Time
navigate_next
பாகம்-1
ஆதியே துணை,  ஓம் நமசிவய சிவாய நம ஓம்
சிவ வாக்கியர் :
இவ்வுலகில் பிறக்கும் குழந்தைகள் யாவும் ""குவா,குவா" என்று உ, அ, என்ற எட்டிரண்டு மந்திரத்தையே, முதன்முதலாக ஒலித்து அழும்.  ஆனால் இவர் பிறக்கும் போது"சிவா, சிவா" என அழுகுரலோடு அலறியதால், சிவவாக்கியர்எனப்புகழப் பெற்றார். . பிறந்ததிலிருந்தே சிவ நாமம் உச்சரித்து, சிவ சிந்தையோடு வாழ்ந்து சித்தராகவே வளர்ந்தவர்.. எளிய குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவராயினும் ஜனித்த போதே சித்தராக உருவாகியதால், இயற்கையாகவே இறைவழிபாடுகள் செய்து அவரின் கடமைகளை ஈசனிடம் விட்டு விட்டு, ஆன்மீக தேடுதல் நாட்டம் கொண்டு அலைந்தார்.இவ்விதம் ஏற்பட்ட இறை நாட்டத்தினால் நான்கு வேதங்கள், சாஸ்திரங்கள், இதிகாசங்கள், புராண,ங்கள் மற்றும் பல நன்னூல்கள் யாவையும் கசடற கற்றறிந்தார். ஆதலால் ஞானதாகம் ஏற்பட்டு பற்பல இடங்களுக்கு அலைந்து ஞான குருவைத் தேடினார். இவரின் இயல்பான கேள்வி ஞானத்திற்கு தக்க பதிலைக் கூறும் மெய் குருவைத் தேடிக் கொண்டே இருந்தார். இவரின் ஞானக் கேள்விகளுக்கு பதில் சொல்ல எந்த குருக்களாலும் இயலவில்லை. ஆதலால் மெய்ஞான குருவை அடைவதே இலட்சியமாகக் கொண்டு, ஊர் ஊராக, கோயில் கோயிலாக, காடு, மலைகளில் எல்லாம் அலைந்து திரிந்து கொண்டிருந்தார்.

இப்படியே ஞானிகளும், யோகிகளும், முனிவர்களும், சித்தர்களும், பக்தர்களும் கூடும் புனித பூமியான காசி மாநகருக்கு வந்தார். அங்கே காசி விஸ்வநாதரையும், அன்னை அண்ணபூரணியையும் தரிசித்து வணங்கி, காசி மாநகரின் அழகையும், வற்றாத கங்கை பெருவெள்ளத்தையும் கண்டார். ஆதியிலிருந்தே புனிதத் தலமாக வழிபடும் காசியில் பூ மணக்காது, பிணம் நாறாது, பல்லி கௌளி சொல்லாது, காக்கை கரையாது, கருடன் வட்டமிடாது போன்ற விபரங்களை நேரில் கண்டார். ஆரூர் பிறக்க முக்தி! அண்ணாமலை நினைக்க முக்தி! காசி இறக்க முக்தி! என சைவர்கள் போற்றும், காசி நகரம் இவ்வுலகின் மத்திய பாகத்தில் அமைந்துள்ளதையும், பூமியின் ஆணி வேராக இத்தலம் அமையப் பெற்ற காரணத்தையும் கண்டு, உணர்ந்து அறிந்தார். அங்கு சாமியாராகவும், குருவாகவும் திகழ்பவர்களிடம் சென்று தனது மெய்ஞானக் கேள்விகளைத் தொடுத்து திக்கு முக்காடச் செய்தார். .அவரின் சந்தேகங்கள்யாவையும் தீர்த்து வைக்கவும், அவருக்கு உபதேசம் வழங்கி தீட்ச்சை  கொடுத்து தெளிய வைக்கவும், அவரது பிறவியை அறிந்த ஸ்ரீமன் நாராயணனே மெய்குருவாக வந்தார். .குருவாக வந்தவர்அங்கு ஒரு செருப்பு தைக்கும் தொழிலாளியாக, ராமன் என்ற பெயரில், சிவவாக்கியரின் பார்வையில் படும் வண்ணம் அமர்ந்து தன வேலையைச் செய்து கொண்டிருந்தார்.

குருவைக் கண்டு தெளிதல்:
அந்த செருப்பு தைக்கும் ராமனைக் கண்டவுடன் சிவவாக்கியரின் உள்ளுணர்வு உணர்த்தப் பெற்று, இவர்தான் தாம் தேடிவந்த மெய்குரு என்பதைக் கண்டுகொண்டார். . இருப்பினும் அவர் உருவைக் கண்டு எள்ளாமல், அவரையே கண்காணித்தவாறு, அவர் திருவடி நிழலைச் சேரும் நாளை எதிர்பார்த்துக் காத்துக் கிடந்தார். ஆனால் அந்த ராமனோ, இவரைக் கவனியாததுபோல, தன செருப்பு தைக்கும் தொழிலை மட்டும் மும்முரமாக செய்து கொண்டிருந்தார். .தினசரிஅவருக்கு கிடைக்கும் உணவை ஒரு பிடி கூட உண்ணாமல், அங்கிருக்கும் பறவை இனங்களுக்கும், நாய்களுக்கும் அளித்து வந்ததை தொடர்ந்து பார்த்து வந்த சிவவாக்கியர், ஒரு நாள் அவரிடம் சென்று பணிந்து நின்றார். ராமன் இவரைப் பார்த்து என்ன வேண்டும் எனக் கேட்டார்.சிவவாக்கியர் அவரை பணிவுடன்வணங்கிய படியே,"ஐயா அடியேன் தினமும் உங்களை கவனித்து வருகிறேன்.  தாங்கள் உணவு உண்டு நான் கண்டதில்லை. பின் எவ்வாறு உயிர் வாழ்ந்து, உழைகின்றீர்கள்" எனக் கேட்டார். ராமனும் சிரித்தபடியே நான் காற்றையே உணவாக்கிக் கொள்கிறேன், வாசியினால் பிராண சக்தியை சேமித்து என் உயிரையும் உடலையும் பாதுகாத்து வளர்த்து வருகின்றேன். ஆதலால் எனக்கு வேறு உணவு தேவைப்படுவதில்லை என்றார்.

இப்பதில் கேட்ட சிவவாக்கியர் இவரே தன சற்குரு என்பதை உணர்ந்து, தெளிந்து, அவர் பாதங்களில் வீழ்ந்து வணங்கி, அவர் பாதம் பற்றிய வண்ணம் சரணாகதி அடைந்து, தானும் மெய்நிலை பெறுவதற்கும், மோட்சம் அடைவதற்கும் வழிகாட்டி உபதேசிக்க வேண்டினார். அவரோ தம்பி "கூரை ஏறி கோழி பிடிக்காதவன் வானமேறி வைகுந்தம் போவானா?" என்று கேள்விகள் பல கேட்கும் சிவ வாக்கியரிடமே கேள்வியைக் கேட்க, பதிலேதும் சொல்லத் தெரியாத சிவ வாக்கியரிடம், மகனே, வீட்டிற்கு கூரை இருப்பது போல மனிதனின் எண்சான் உடம்பாகிய வீட்டிற்கு கூரையாக இருப்பது சிரசாகிய தலையேயாகும். .அங்கே உயிராகிய கோழி உலாவிக் கொண்டிருக்கின்றது. . அந்த உயிரை அறிந்து கொண்டு ஆறு ஆதாரங்களையும் யோகா ஞான சாதகத்தால் ஏறி பிடித்தால் உயிரில் ஒளிந்திருக்கும் இறைவனை சிக்கெனப் பிடிக்கலாம். அவ்வாறே தியானம், தவம் இருந்து ஆகாயத்தலத்தில் ஏறி மோட்சமாகிய வைகுந்தம் சேரலாம் என்பதையே இவ்வாறு பழமொழியாகக் கூறியுள்ளார்கள். ஆதலினால் நீயும் உன் சிரசில் இருக்கும் இறைவனைத் தியானத்தினால் பிடித்தால், அவனருளால் இம்மாதிரி பல சித்திகளைப் பெற்று மோட்சமடையலாம் என்று விளக்கினார். பார்ப்போரை எல்லாம் கேள்விக் கணைகளால் திணற, பிரமிக்க வைத்த சிவ வாக்கியர் மறு கேள்வியின்றி குகுவின் கருணை கிட்டி, உபதேச தீட்ச்சை பெற வேண்டி மவுனமாக மண்டியிட்டு நின்றார்.

குரு உருவில் வந்த ராமன் சிவ வாக்கியரை மேலும் சோதிக்க எண்ணி அவரிடம் மகனே, நான் இந்நாள் வரை செருப்பு தைத்து வந்த வருவாயை சேர்த்து வைத்துள்ளேன். . இந்த காசுகளை உன்னிடம் தருகின்றேன். அதை நீ என் தங்கையாகிய கங்கையிடம் கொடுத்துவிட்டு வந்து சேர் என்றார். மேலும் அவரிடம் ஒரு பேய்ச் சுரக்காயைக் கொடுத்து இதன் கசப்பு போக கங்கையில் கழுவிக் கொண்டு வா என்று கூறினார். . சிவவாக்கியர் கேள்விகள் ஏதும் இல்லாமல், மறுப்பேதும் சொல்லாமலே அக்காசையும், பேய்ச் சுரக்காயையும் பெற்றுக் கொண்டு குருநாதரின் ஆணைப்படியே கங்கையை நோக்கி புறப்பட்டார்.  குருநாதர் எதைச் சொன்னாலும் அதைச் செய்ய வேண்டும் என்ற ஒரே நினைவோடு கங்கையை அடைந்து தாயே, இதோ எனது குருநாதர் கொடுத்தனுப்பிய காசுகளைப் பெற்றுக்கொள் எனச் சொல்லி கங்கை நீரில் போடப் போன பொழுது வளையல் அணிந்த அழகிய கைகள் நீருக்குள் இருந்து வெளிப்பட்டு சிவ வாக்கியர் கொடுத்த காசுகளைப் பெற்றுக் கொண்டு நீரில் மறைந்தது. சிவ வாக்கியர் அதனை பிரமிப்புடன் பார்த்துவிட்டு பேய்ச்சுரைக்காயை கங்கை நீரில் கசப்பு போக கழுவி எடுத்துக்கொண்டு குருபிரானிடம் திரும்பினார். 

மறுநாள் குரு தன்னுடனேயே  இருக்கும் சிவ வாக்கியரை அழைத்து நேற்று என் தங்கை, கங்கையிடம் கொடுத்த காசுகளை, இப்போது தேவைப் படுவதால், அவைகளைத் திரும்ப வாங்கி வா என்றார். சீடரும் உடனே கங்கையை நோக்கி புறப்பட, குரு அவரை நிறுத்தி, தான் செருப்பு தைக்க தோல் பையில் வைத்திருக்கும் தண்ணீரைக் காட்டி இதுவும் கங்கை நீர்தான், இங்கேயே கேட்டு வாங்கித்தா என்றார். சிவ வாக்கியரும் குரு வார்த்தையை மீறாமல் அத்தோல் பையில் இருந்த கங்கை நீரைப் பார்த்து, நேற்று நான் உன்னிடம் கொடுத்த என் குருநாதரின் காசுகளை திரும்பவும் தா என வேண்டினார். அடுத்த கணமே அத்தோல் பையிலிருந்து அதே வளைகரங்கள் தோன்றி, அக்காசுகளை மாறாமல் கொடுத்து விட்டு மறைந்ததுஎவ்வித வியப்போ, திகிலோ, பயமோ இன்றி எந்த உணர்ச்சிகளுக்கும் ஆட்படாது தன கடன் குரு பணியே என்று அதனை குருவிடம் ஒப்படைத்தார்.குரு சிவவாக்கியரைப் பார்த்து வேறு ஏதேனும் சந்தேகங்கள் இருக்கின்றனவா எனக் கேட்க, சிவ வாக்கியர் குருவின் தாள் பற்றி எந்த சந்தேகங்களும் இப்போது இல்லை குருநாதா, நான் கேள்விகள் கேட்டுப் பெறமுடியாத மெய்ப்பொருளை அருளி உபதேசியுங்கள் என்று வேண்டி நின்றார். சந்தேகங்கள் யாவும் தீர்ந்து தெளிந்தவனே உண்மையான சீடன், நீ உபதேசம் பெற தகுதியுள்ளவனாய் மாறிவிட்டாய். ஆகவே உனக்கு சித்தர்களின் மணிமந்திர ஒளஷத  தீட்ச்சைகளை வழங்குகின்றேன் என ஆசி கூறி உபதேசம் செய்தார் குருவாக வந்த ராமன்.
  

குரு கொடுத்த ஒவ்வொரு தீட்சைகளையும் முறையாக பயிற்சி செய்து பழுதறப் பயின்று வந்தார் .   ஒருநாள் குருவானவர் தன சீடரிடம் சிவ வாக்கியா, நீ எல்லா சித்திகளையும் உன் வைராக்கிய தவ முயற்சியினால் பெற்று சித்தனகிவிட்டாய். இருப்பினும் நீ இல்லற தர்மத்தை முடிக்க வேண்டி இருப்பதால் அதனையும் கடக்க உனக்கு நல்ல மனைவி  அமைய வேண்டும். . உன் தவத்தையும் தொடர்ந்து செய்து கொண்டு உலக அனுபவங்களைப் பெற்று சித்தராக வாழ்ந்து வர . சித்தர்களில் சிறந்த பேரு பெற்று பரம்பொருளை அடைவாய் என அருளாசி வழங்கி, சிவ வாக்கியரிடம் ஆழாக்கு மணலையும் ஒரு பேய்ச் சுரைக்காயையும் கொடுத்து இதனை சமைத்து உனக்கு உணவு படைப்பவளே உன் மனைவியாவாள். .அவளைக் கண்டு மணம் முடித்து, இல்லறம் நடத்தி, அக்கர்மாவை முடித்து தவம் புரிந்து வா.  தக்க தருணத்தில் யாம் வந்து ஆட்கொள்ளுவோம் எனக் கூறி மறைந்து  போனார் ராமனாக வந்த ஸ்ரீ ஹரி நாராயணர். 
navigate_next
பாகம்-2
ஆதியே துணை,  ஓம் நமசிவய சிவாய நம ஓம்
சிவ வாக்கியர் :

இல்லறத்தில் இணைதல்:- குருவின் கட்டளையை நிறைவேற்ற அவர் கொடுத்த ஆழாக்கு மணலையும் பேய்ச்சுரைக்காயையும் எடுத்துக்கொண்டு தன் இல்வாழ்க்கைத் துணையைத் தேடி தெற்கு திசை நோக்கி பயணமானார். சித்தரின் அழகில் வயப்பட்ட பல இளம் பெண்களும் அவரை மணக்க விரும்பினர். ஆனால் சித்தரின் நிபந்தனை கேட்டு ஆழாக்கு மணலை எவ்வாறு சமைத்து உணவு படைப்பது எனப்  புரியாமல் தயங்கினார்கள். இப்படியே ஒவ்வொரு ஊராக அலைந்து கொண்டிருந்த சிவவாக்கியர், ஒரு நாள் வீட்டின் முற்றத்தில் மூங்கில் கூடை பின்னிக் கொண்டிருந்த ஒரு குறப் பெண்ணைக் கண்டார். கண்டவுடனேயே இவள்தான் தான் தேடி வந்த பெண் என்று உள்ளுணர்வு உணர்த்தப் பெற்றார். . உடனே தனிமையில் வேலை செய்து கொண்டிருந்த அப்பெண்ணை நோக்கி சென்றார். .அக்குற மாதும் சித்தரைக் கண்டு நாணி இன்முகத்தோடு வரவேற்று அமரச் சொல்லி அருந்த தண்ணீர் கொடுத்தாள். சிவவாக்கியரும் அப்பெண்ணிடம் தான் கொண்டு வந்த மணலையும் பேய்ச் சுரைக்காயையும் கொடுத்து இதனை எனக்கு சமைத்து உணவு படைத்து தர உன்னால் முடியுமா? என அன்புடன் கேட்டார். அக்குறப்பெண்ணும் மறுப்பேதும் சொல்லாமல் இதோ ஒரு நாழிகைக்குள் உணவு படைக்கிறேன் எனக்கூறி அந்த ஆழாக்கு மணலையும் பேய்ச் சுரைக்கயையும் கழுவி சமையல் செய்ய ஆரம்பித்தாள். . .அவள் அடுப்பைப் பற்ற வைத்து சமையல் செய்கையில் அதிசயமான முறையில் மணல் அருமையான சாதமாகவும், பேய்ச்சுரைக்காய் ருசி மிகுந்த கூட்டுக் குழம்பாகவும் மாறி மனம் வீசியது. . இதனை வியப்புடன் பார்த்துக் கொண்டு காத்திருந்த சித்தருக்கு, இலையில் பரிமாறி சாப்பிட அழைத்தாள். . சிவவாக்கியரும் இன்முகத்தோடு அமர்ந்து சுவைத்துச் சாபிட்டார். 

 பின் இவள்தான் நம் குருநாதர் சொல்லிய இல்வாழ்க்கைத் துணை என்பதை அறிந்து அவளை மணமுடிக்க எண்ணம் கொண்டு அவளின் தாய், தந்தையரைப் பற்றி விவரங்களைக் கேட்டார். . அப்பெண் கூடை முறம் பின்ன மூங்கில் வெட்டுவதற்காக அவர்கள் சென்றுள்ளனர் என்றும் அவர்கள் திரும்பி வரும் நேரம்தான் இது எனவும் பதிலுரைத்தாள். . அவள் சொன்னது போலவே தொலைவில் அப்பெண்ணின் பெற்றோர்கள் குடிசைக்கு வந்து கொண்டிருந்தனர். .அவர்கள் சுமையை இறக்கி வைத்து தங்கள் வீட்டின் முன்பு அமர்ந்திருந்த சிவவாக்கியரைப் பார்த்து திகைத்த வண்ணம் வணங்கி சுவாமி தாங்கள் யார்? உங்களுக்கு என்ன வேண்டும் என்று பயத்துடன் கேட்டனர். . சிவவாக்கியர் அவர்களின் அச்சத்தைப் போக்கி தன்னைப் பற்றி எடுத்துரைத்து, தான் இங்கு வந்த விவரத்தையும், நடந்தவைகளையும் கூறி தவம் செய்யும் எனக்கு துணையாக ஒரு பெண்ணைத் தேடினேன், .இவளே என் குருநாதர் கூறியகுணவதி, . ஆகவே இவளை தங்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து தர வேண்டும் என பணிவுடன் கூறி வேண்டினார். .   

மகளின் விருப்பத்தை அறிந்துகொண்ட பெற்றோர் ஐயனே தங்களைப் போன்ற ஒரு சித்தபுருஷருக்கு என்மகளைத் திருமணம் செய்து கொடுப்பது எங்கள் பூர்வ புண்ணிய பாக்கியமே. !ஆனால் திருமணத்திற்கு பிறகு எங்கள்குலவழக்கப்படி நீங்கள் இங்குதான் வாழவேண்டும். .எங்கள் குலவழக்கத்திற்குகட்டுப்பட்டு எங்கள் கூட்டத்தில் சேரவேண்டும். இவைகளை நீங்கள் ஏற்றுக்கொண்டால் எங்கள் மகளை தங்களுக்குத் திருமணம் செய்து கொடுக்கின்றோம். தங்களுக்கு சம்மதமா எனக் கேட்டனர். . சிவவாக்கியரும் குருவின் கட்டளைப்படி இல்லறக்கடன் முடிக்க அவர்கள் கூட்டத்திலேயே சேர்ந்து வாழ ஒத்துக்கொண்டார். அதன்படியே ஒரு நல்ல நாளில் அவர்கள் குல வழக்கப்படி இருவருக்கும் திருமணம் சிறப்பாக நடந்தேறியது. குறவர் குலகூட்டத்தி லேயே  தங்கி இல்வாழ்வை இனிதாக நடத்தி வந்தார் சிவவாக்கியர் . சித்தருக்குரிய ரிஷி பத்தினியாக வாழ்ந்து வந்தாள் அந்த குறமாது சிவவாக்கியர் தான் ஜனித்ததிலிருந்தே ஓதி வரும் சிவபஞ்சாட்சர மந்திரத்தையும் குரு உபதேசித்த யோகா ஞானத்தையும் செவ்வனே  செய்து தவம் புரிந்து வந்தார். . இல்லறம் நடத்த காட்டிற்கு சென்று மூங்கில் வெட்டி எடுத்து வந்து குறவர்களைப்போல் கூடை, முறம் போன்ற வைகளைச் செய்து அதனைச் சந்தையில் விற்று நிறைவாக இல்லறம் நடத்தி வாழ்ந்து கொண்டிருந்தார். இவ்வாறு இல்லறத்தையும், ஆன்மீகத்தையும் இரு கண்களைப் போல் கருதி காத்து வந்தார் சிவவாக்கியர். 

ஆட்கொல்லி:-
ஒருநாள் சிவவாக்கியர் காட்டிற்கு மூங்கில் வெட்டி எடுத்துவர சென்றார். . அவர் ஒரு மூங்கிலை வெட்டியபோது அதிலிருந்து தங்கத் துகள்கள் தகதகவென மின்னிக் கொண்டு, கொட்டிக் கொண்டே இருந்தது. . அதனைப் பார்த்த சிவவாக்கியர், ஐயோ! ! ஆட்கொல்லிஆட்கொல்லி, என அலறியபடியே ஓடி வந்தார். வழியில் இவரைக் கண்ட நான்கு இளைஞர்கள், ஆட்கொல்லி ஆட்கொல்லி என கத்தியபடியே ஓடி வந்த சித்தரைப் பிடித்து நிறுத்தி என்ன விவரம்? ஏன் இப்படி ஓடி வருகின்றீர்கள்? என விசாரித்தனர். . இவரோ அங்கெ ஆட்கொல்லி கொட்டிக்கொண்டே இருக்கிறது, என அஞ்சியபடியே சொல்லிக் கொண்டிருந்தார். .நான்கு நண்பர்களும்இவரை அழைத்துக் கொண்டு அவ்விடத்தை சென்று பார்க்கையில் வெட்டப்பட்ட மூங்கிலில் இருந்து தங்கத்துகள்கள் கொட்டிக் கொண்டிருந்தது. நால்வரும் அவ்விடத்தை விட்டு திரும்பி வந்து, ஆமாம் சித்தரே அது ஆட்கொல்லிதான். நாங்கள் அதனைப் பார்த்துக் கொள்கிறோம், நீங்கள் தைரியமாக வீட்டிற்குச் செல்லுங்கள் எனக் கூறி சிவவாக்கியரை அவ்விடத்தைவிட்டு அனுப்பி வைத்தனர். 

சிவவாக்கியரும் அது ஆட்கொல்லி, ஆட்கொல்லி எனச் சொல்லி எச்சரித்துவிட்டு, அனைத்தும் சிவன் செயலே எனக் கூறி வீடு திரும்பினார். அவர் சென்றதைக்  கண்ட அந்நால்வரும் அரவமற்றதும் அங்கிருந்த தங்கம் முழுவதையும் ஒரே மூட்டையாகக் கட்டி, ஒரு பாழும் கிணற்றின் அருகே இறக்கி வைத்தனர். நடுநிசிக்குப்பின் யாருக்கும் தெரியாமல் நம் வீட்டிற்கு இதைக் கொண்டு சென்று, நான்கு பங்காக பிரித்துக் கொள்ளலாம் என்று முடிவெடுத்து காத்துக் கிடந்தனர். நான்கு இளைஞர்களுக்கும் பசி வந்து துன்புறுத்தியது. அதனால் இரண்டு பேர் ஊருக்குள் சென்று பசியாறிவிட்டு, மற்ற இருவருக்கும் சாப்பாடு வாங்கி வருமாறு முடிவு செய்து, இருவர் காவல் காக்கவும் இருவர் சாப்பிட்டுவிட்டு சாப்பாடு வாங்கி வரவும் சென்றனர். "விநாச காலே விபரித்த புத்தி"என்பதைப் போல ஊருக்குள் சென்று உணவருந்திய இருவரும் தங்கத்தின் மேல் கொண்ட ஆசையினால் விபரீத புத்தி ஏற்பட்டு காவலிருப்பவர்களுக்கு வாங்கிய சாப்பாட்டில் கொடிய நாகத்தின் விஷத்தை கலந்து எடுத்து வந்தனர் . அவர்கள் நஞ்சு கலந்த உணவை உண்டு மாண்டபின் தங்கத்தை நாம் இருவரும் பங்கு போட்டு எடுத்துக்கொண்டு வளமுடன் வாழலாம் என மனக் கணக்குப் போட்டு வந்தார்கள். தங்க மூட்டைக்கு காவலிருந்த இருவருக்கும் இதே போல கேட்ட எண்ணம் ஏற்பட்டு சாப்பாடு கொண்டு வரும் நண்பர்கள் இருவரையும் எப்படியாவது தந்திரமாக கொன்று விட்டு நாமே எல்லாத் தங்கத்தையும் பங்கு போட்டுக் கொள்ளலாம் எனத் திட்டம் தீட்டினர். 

.சாப்பாடு வாங்கி வந்த நண்பர்கள் இருவரையும் பக்கத்தில்உள்ள கிணற்றில் தண்ணீர் எடுத்துவரக் கூறினர் .தண்ணீர் எடுக்க அப்பாழுங் கிணற்றினுள் எட்டிப் பார்க்கையில் அவர்கள் அறியாவண்ணம் பின்வந்து அவர்களை, அப்பாழுங் கிணற்றினுள் தலைகுப்புறத் தள்ளி விட்டார்கள். .சாப்பாடுகொண்டுவந்த நண்பர்கள் இருவரும் கிணற்றில் அடிபட்டு அப்போதே மாண்டு போனார்கள். . பின் இவர்கள் இனி தங்கம் முழுமையும் நமக்குத்தான் என மகிழ்ச்சியுடன் கூறிக் கொண்டே பசி வருத்த, இறந்தவர்கள் கொண்டு வந்த நாக நஞ்சு கலந்த உணவை உண்டனர். .உண்டு முடித்தவுடன் வாயில் நுரை தள்ளியபடியேநஞ்சு தலைக்கேறி அங்கேயே வீழ்ந்து இறந்து போனார்கள். .காலையில் எப்போதும்போல் மூங்கில் வெட்ட வந்த சிவவாக்கியரும் அவரது துணைவியாரும் இறந்து கிடந்த நால்வரையும் தங்க மூட்டையையும் கண்டனர். . சிவவாக்கியர் ஞானதிருஷ்டியால் நடந்ததை அறிந்து, தம் மனைவியிடம் நான் அப்போதே இவர்களிடம் சொன்னேன் இது ஆட்கொல்லி என்று,  கேளாமல் இறந்து கிடக்கின்றனர் என்றார். 

சிவவாக்கியரின் மனைவி என்ன செய்வது எனக் கேட்க, சிவவாக்கியர் இது இன்னும் எத்தனை பேரைக் கொல்லுமோ எனக்கூறி அக்காட்டிலேயே ஒரு பெரிய குழியினைத் தோண்டி யாருக்கும் தெரியாமல் அத்தங்க மூட்டையை அக்குழியில் போட்டு மூடினார். தேவையான மூங்கிலை வெட்டி எடுத்துகொண்டு தங்கள் வீட்டிற்கு இருவரும் திரும்பினர். வீட்டிற்கு வந்ததும் தம் மனைவியிடம் சிவவாக்கியர், என்னம்மா உனக்கு தங்கத்தின் மீது ஆசையுள்ளதா? எனக் கேட்டுக் கொண்டே கொல்லைப்புறம் அழைத்துச் சென்றார். . பின் அங்கிருந்த குட்டிச்சுவர் மீது சிறுநீரைப் பெய்தார். .உடனே அந்த மண் சுவர்முழுவதும் பொன்னாகி மின்னியது.   அம்மா உனக்கு வேண்டிய பொன்னை எடுத்துக்கொள்என்றார். . சிவவாக்கியரின் மனைவியோ சிறிதும் சலனமின்றி சுவாமி ! தங்கள் மனைவியான எனக்கு தங்கள் சொல்லே வேதம், அடியவளுக்கும் இது ஆட்கொல்லிதான், தங்கள் அன்பையும், தங்களுக்கு செய்யும் பணிவிடைகளையும் தவிர இவ்வுலகில் எனக்கு வேறெதுவும் வேணாம் என்று பதிலுரைத்தாள். .தனது மனைவி பக்குவப்பட்டவள்என்பதில் பூரண திருப்தி கொண்ட சிவவாக்கியர் மன மகிழ்ச்சியுடன் தம் மனைவியுடன் வாழ்ந்திருந்தார்.  
 
 சித்தர்களுடன் இணைதல்:-
சிவவாக்கியரின் ஞானத்தையும், தவத்தையும் கேள்வியுற்று அறிந்த கொங்கணச் சித்தர் இவரைச் சோதிக்க எண்ணி சிவவாக்கியரைக் காண வந்தார். .சிவவாக்கியரைக்கண்டு அளவளாவி மகிழ்ந்து, தன் ரசவாத வித்தையால் அரும்பாடுபட்டு செய்து முடித்த குளிகையைக் காண்பித்து இது காணிப் பொன் பெறும் என்றார். சிவவாக்கியர் உடனே தம் உடம்பிலிருந்து அழுக்கைத் திரட்டி எடுத்து இது கோடிப் பொன் பெறும் என்று சொல்லி கொங்கனரிடம் கொடுத்தார். ரசவாத வித்தையில் சித்தி பெற்று சிறந்தவரான கொங்கணச் சித்தரும் அவ்வழுக்கைப் பரிட்சித்துப் பார்த்து வியப்படைந்து, ஆம், ஆம் இது கோடிப் பொன் பெறும் என்பது உண்மையே! சிவவாக்கியர் தன் உடம்பையே அழியாக் கற்பமாக மாற்றியுள்ளார் . அவருடைய யோக ஞானமும் தவ வலிமையையும் சித்தர்களால் பாராட்டப்பட வேண்டியதே என்று புகழ்ந்துரைத்தார். .இதன் பின் சிவவாக்கியரும்கொங்கன சித்தரும் சிறந்த நண்பர்களாயினர் . 
மூன்றாம்பாகம் மேலும் பயணிப்போம்
navigate_next
பாகம்-3
ஆதியே துணை,  ஓம் நமசிவய சிவாய நம ஓம்
சிவ வாக்கியர் : திருமழிசையாழ்வார் & 
குவா குவா என்று எட்டிரண்டுக்குப் பதிலாக, சிவா, சிவா என்று அழுகுரலோடு பிறந்த சிவவாக்கியர் ஆதியிலிருந்தே ஞான தாகம் கொண்டு ஊர் ஊராக, காடு மலை வனாந்திரம் என்று அலைந்து , கரையாத காக்கையையும், கவுளி சொல்லாத  பல்லியையும், வட்டமிடாத கருடனையும், நாறாத பிணத்தையும், மனக்காத பூவையும், இப்புவியின் மையப் பகுதியாகவும், ஆணி வேறாகவும் அமைந்த புண்ணிய பூமியாம் காசி மாநகரில், ஸ்ரீ ஹரி நாராயனரே ராமன் என்னும் செருப்புத் தைக்கும் தொழிலாளியாக வந்து சிவவாக்கி யருக்கு தவ மற்றும் ஞான மார்க்கத்தினை தீட்ச்சை வழங்கி அருளினார். 

அக்குருவின் கட்டளைப் படியே இல்லற தர்மத்தை முடிக்க தர்ம பத்தினியாம், ஒரு நற்குண குறமாதினை மணந்து இல்வாழ்வையும், தவ மற்றும் யோக மார்க்க வாழ்வினையும் தனது இரு கண்களைப் போன்று கடைப் பிடித்து மிகப் பெரும் சித்தராக, தனது மனதையும், உடலையும் காய கல்பமாக வளர்த்துக் கொண்டார். இதனை அறிந்த ரசவாத வித்தையில் சித்தி பெற்று சிறந்தவரான கொங்கணச் சித்தர் இவரை சந்தித்து ஆத்ம நண்பரானார். 

சீர்காழியில் தவம் புரிந்து வாழ்ந்திருந்த சட்டை முனிநாத சித்தரைக் காண ஆர்வம் கொண்டு ககன மார்க்கத்தில் வந்து அவரைச் சந்தித்து சத்சங்கம் செய்தனர். பின் மூவரும் ஒன்று சேர்ந்து சதுரகிரி சுந்தர மாகாலிங்க மலைக்குச் சென்று தவம் செய்தனர். சென்ற இடங்களில் எல்லாம் மக்கள் தொண்டும் மகேசன் தொண்டும் செய்து கொண்டிருந்தனர். சதுரகிரியில் தவம் செய்யும் பதினெண் சித்தர்களையும் தரிசித்து அவர்களுடன் ஒன்றாகக் கலந்தனர். பின் பொதிகை மலை, கொல்லிமலை, கயிலைமலை போன்ற இடங்களுக்குச் சென்று இறை தரிசனம் பெற்றனர். 

கொங்கன சித்தர் கலியின் கொடுமைகளுக்கு மக்கள் ஆளாவதைக் கண்டு மனம் பொறாமல், திருப்பதி மலைக்குத் திரும்பினார். கலி முடியும் வரை கல்ப கோடி காலம் ஜீவசாமாதியில் இருந்து, இறையை வேண்டுவோர்களுக்கு அருளும், பொருளும் கிடைக்க வழிவகை செய்து திருப்பதியில் சாமாதியில் ஐக்கியமாகி இருந்து வருகின்றார். சிவவாக்கியரும், சட்டை முனி நாத சித்தரும் மக்களின் அறியாமை அகலவும், எல்லோரும் இன்புன்றிருக்கவும், மரணமில்லா பெரு வாழ்வை பெறவும் பல பாடல்களை இயற்றி பாடி வந்தனர்.

மீண்டும் சீர்காழிக்குத் திரும்பிய சட்டி முனி நாத சித்தரும், சிவவாக்கியரும் ஈசனுக்குரிய சேவைகள் யாவையும் செய்து முடித்தனர். பின் இருவரும் ஈசனோடு ஐக்கியமாகும் எண்ணங்கொண்டு அதற்கான தவ முயற்சியில் ஈடுபட முடிவெடுத்தனர். சிவவாக்கியர் திருமழிசை என்ற ஊரிலும், சட்டைமுனி நாத சித்தர் சீர்காழியிலும் கடுமையான தவம் பூண்டு கல்பதேகமான தங்கள் உடம்பை சமாதியிலேயே இருந்து பரிசுத்த ஆன்ம ஜோதியோடு, ஈசனோடு கலக்க சிவலோகம் புகுந்தனர். 

அங்கே பரம்பொருளாகிய ஈசன், இவர்களின் ஆன்மாக்களைத் தடுத்து நிறுத்தி நீங்கள் இருவரும் இப்பூவுலகில் ஆற்ற வேண்டிய பணிகள் நிரம்ப இருக்கின்றது, பக்தி ஞானத்தை வளர்க்கவும், இறை சக்தியை நிலை நிறுத்தவும் நீங்கள் மீண்டும் மண்ணில் பிறந்து அதனை செய்து முடித்து என்னைச் சேருங்கள் என கட்டளையிட்டார். ஈசன் ஆணையின் வண்ணம் சட்டைமுனி நாத சித்தர் " ஸ்ரீ இராமானுஜராகவும்", சிவவாக்கிய சித்தர் "ஸ்ரீ திருமழிசை ஆழ்வாராகவும்" மீண்டும் இப்பூமியில் அவதரித்தனர். 

திருமழிசையாழ்வார்:  
திருமழிசையில் கடுந்தவம் புரிந்துவந்த பார்கவர் என்ற முனிவர், விதிவசத்தால் கனகாங்கி என்ற தேவமத்தின் மீது மையல் கொண்டு ஆவலுடன் கூடிக் கலந்தார். அதன் விளைவாக அவரது பிரம்மச்சரிய விரதம் வீணாகி போன வேதனையில், அவளை பிரிய கருவுற்ற கனகாங்கி, உருப்பெறாத பிண்டம் சிசுவாகப் பிறக்க, அதனை வெறுத்து அங்கிருந்த பிரம்பு புதரில் வீசி எறிந்துவிட்டு விண்ணுலகம் சென்றாள். ஈசனின் கட்டளையின் படி தனது ஆன்மாவை அத்தேவமாது வீசி எறிந்த பிண்டத்திலுள் புகுத்தி கொண்டார் சித்தர் சிவவாக்கியர். திருமாலின் அருளால் அக்கரு உயிர்பெற்று ஒரு சிறந்த ஆண் குழந்தையாக உருவாகியது. 

மறுநாள் அங்கே பிரம்பறுக்க வந்த, திருமால் பக்தனாகிய, குழந்தை பேறில்லாத,   வேளாளன் என்ற  திருவாளன் என்பவர், ராம ராம என்று அழுதுகொண்டிருக்கும் அக்குழந்தையை, திருமாலின் வரப்பிரசாதமாக எண்ணி வீட்டிற்கு கொண்டுவந்து, சீராட்டி, பாலூட்டி, திருமழிசையான் என்ற பெயருமிட்டு வளர்த்தார்.  திருமழிசையான் அருந்தி மீதமிருந்த பாலை அருந்திய காரணத்தால் அவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கப் பெற்று, கணிகண்ணன் என்ற ஆண் மகவை பெற்று இரு குழந்தைகளையும் இரு கண்களைப் போல பாதுகாத்து வளர்த்து வந்தனர்.  முன்பே செய்திருந்த தவப்பயன் தொடர்பால் தனக்கு முன்பு குருவாக வந்தவன் ஸ்ரீமன் நாராயணனே என்றுணர்ந்து, திருமால் புகழ் பாடி ஆழ்வாரானார். இவ்விதம் சிவவாக்கியர் திருமழியானாக தவாக்னியாக, மாறியதால் ஈர்க்கப்பட்ட முதலாழ் வார்களில் ஒருவரான பேயாழ்வார், திருமழிசையாரைச் சந்தித்து ஞான உபதேசம் கொடுத்து, திருமழிசை ஆழ்வாராக்கினார். ஈசன் இவரின் ஹரி பக்தியைக் கண்டு வியந்து 'பக்திசாரர்' என திருநாமமிட்டு வாழ்த்தி மறைந்தார். 

மேலும் தனது தவ வலிமையால் மாய மந்திரக்காரனாகிய சுக்திஹாரன் என்பவனை வென்று, அவனின் அகந்தையை அழித்து ஓடச் செய்தார். கனிகண்ணனும் இவரையே தனது குருவாகக் கொண்டு குரு சேவை செய்தார். தனிமையில், குகையில் தவம் செய்து கொண்டிருந்த திருமழிசை ஆழ்வாரின் தவப் பேரொளியை, அவ்வழியே தேசாந்திரம் வந்த முதலாழ்வார்கள், பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் ஆகிய மூவரும் திருமழிசை ஆழ்வாருடன், பேயாழ்வாரின் அவதாரத்தலமான திருமயிலையில் தங்கி திருமாலின் பெருமையையும், பக்தியையும் பரப்பினர்.  முதலாழ்வார்கள் மூவரும் திருத்தல பயணம் சென்றபின்னர், திருமழிசையாழ்வார், திருமழிசை திரும்பி பல்லாண்டு வாழ்ந்திருந்தார்.  
மேலும் பயணிப்போம் திருமழிசையாழ்வாரின்அருமை பெருமைகளைக் கண்டபின்  ஜீவசாமாதியை நோக்கி....
navigate_next
பாகம்-4

சித்தர் சிவவாக்கியர் & திருமழிசையாழ்வார்:
ஈசன் ஆணையின் வண்ணம் சட்டை முனி நாத சித்தர் 
" ஸ்ரீ இராமானுஜராகவும்", சித்தர் சிவவாக்கிய  "ஸ்ரீ திருமழிசை ஆழ்வாராகவும்" மீண்டும் இப்பூமியில் அவதரித்தனர்.  
ஆழ்வாரிடம் பெருமதிப்பும், மெயபக்தியும் கொண்ட ஒரு வயதுமுதிர்ந்த மூதாட்டிக்கு, மாறாத இளமையும், பேரழகும் கிடைக்க வரம்கொடுத்தார். அவளின் அழகில் மயங்கிய அந்நாட்டு அரசன் பல்லவராயன் அவளை பட்டத்து ராணியாக்கி கொண்டான். தனக்கு மூப்பு ஏறும்பொழுது, தனது மனைவிக்கு என்றும் மாறாத இளமையும், அழகையும் கண்டு வினவ, திருமழிசையாழ்வாரின் வரமகிமையைக் கூறினாள். தனக்கும் அவ்வித வரம் வேண்டும் என்று கணிகண்ணன் மூலம் விண்ணப்பிக்க, தனது குருநாதர் அவ்விதம் செய்ய மாட்டார் என்று கணிகண்ணன் கூறினார். கோபம் கொண்ட மன்னன், கனிகண்ணனை நாடு கடத்த, அதனால் கோபம் கொண்ட திருமழிசை பிரான்,  
"கணிகண்ணன் போகின்றான் காமரு பூங்கச்சி 
மணிவண்ண நீ கிடக்க வேண்டா
துணிவுடைய செந்நாப் புலவனும் போகின்றேன்
நீயுமுன்றன் பை நாகப்பாய் சுருட்டிக் கொள்"
என்று பாடிவேண்டி திருவெக்காவில் கோயில் கொண்டிருந்த பெருமானையும் தனது சீடரையும் அழைத்துக் கொண்டு அருகில் இருந்த ஊருக்கு சென்றார். 

இவ்விதம் விஷ்ணுவும், உடன் லக்ஷிமிதேவியும் அவ்வூரை விட்டகன்றதால் நகர் எல்லா பொலிவும் இழந்து பெருந்துன்பங்கள் சூழ்ந்து மன்னனும் மக்களும் துன்புற்று வருந்தினர். இதன் காரணத்தை அறிந்து, திருமழிசையாழ்வாரிடம் தண்டனிட்டு மன்னிக்குமாறும், நாடு திரும்பவும் வேண்டுமென  மன்னனும், அமைச்சர் பெருமக்களும் வேண்டிக் கொண்டதனால், திருமழிசைபிரான்,   தான் முன்னமே பாடிய பாடலை சிறிது மாற்றி 
"கணிகண்ணன் போகொழிந்தான் காமரு பூங்கச்சி 
மணிவண்ண நீ கிடக்க! வேண்டும் 
துணிவுடைய செந்நாப் புலவனும் போக்கொழிந்தேன் 
நீயுமுன்றன் பை நாகப்பாய் படுத்துக் கொள்"
எனப் பாடி வேண்ட, பெருமாளும், குருவும் உடன் வர கணிகண்ணன் கச்சியம்பதி திரும்பினான். நகர் தனது பழைய நிலையையும் பொலிவையும் பெற்றுத் திகழ்தது. இந்த வரலாறு காரனமாகவ் இவ்வூர் கோயில் கொண்ட திருமாலுக்கு "சொன்ன வண்ணம் செய்த பெருமாள்" என்ற பெயர் வழங்கலாயிற்று இவர்கள் சென்று தங்கிய ஊரும் "ஓரிரவிருக்கை" என்று அழைக்கப் படுகின்றது. 

ஒருசமயம் கும்பகோணத்தை அடுத்த பெரும்புலியூரில் வேத விற்பன்னர்கள்(அந்தணர்கள்) வேதம் ஓதிக் கொண்டிருந்த ஒரு இல்லத்தின் வெளித்திண்ணையில் அமர்ந்து களைப்பாறிக்  கொண்டிருந்த சமயம், உள்ளிருந்து வந்த வேத விற்பன்னர்கள், அமர்ந்திருந்தது திருமழிசை ஆழ்வார் என்று அறியாமல் அவர் கேட்டுவிடக் கூடாது என்று வேதம் ஓதுவதை நிறுத்திவிட்டு அவரை ஏளனமாக பேசினார். அதனால் வருத்தமுற்ற திருமழிசையாழ்வார் அங்கிருந்து அகன்றார். அவர் சென்ற பின்பு வேதம் ஓத முயன்றனர். ஆனால் எந்த இடத்தில் அவர்கள் நிறுத்தினார்கள் என்பது ஞாபகத்திற்கு வரவில்லை. அதன் பிறகுதான் ஆழ்வாரை தூஷணம் செய்ததால்தான் இவ்வாறு ஆயிற்று எனக் கண்டு அவரிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டனர். ஆழ்வாரும் அவர்களை மன்னித்து,  அங்கிருந்த கருப்பு நெல்லை தனது  நகத்தால் கீறியபடி, "க்ருஷ்ணாநாம் வ்ரிஹீநாம் நக நிர்ப்பிந்தம்" என்று வேதத்தில் விட்ட இடத்தை நினைப்பூட்டினார். 

அவ்வூரில் யாகங்கள் செய்து வாழ்ந்திருந்த பெரும்புலியுரடிகள் என்பவர் ஆழ்வாரின் சிறப்புக்களை அறிந்துகொண்டு, ஆழ்வார் செல்லும் பக்கமெல்லாம் அவ்வூர் கோயில் கொண்ட பெருமாள் திரும்புவதை கேள்வியுற்று ஆழ்வாரின் சீடரானார். தனது யாகத்தின் முதற்பூசையை தனது குருநாதருக்கு வழங்குவதை அவ்வூர் மக்கள் கேலி செய்வதை ஆழ்வாரிடம் கூறி, அவரின் உண்மை சொருபத்தைக் காட்டி அவர்களைத் திருத்தும்படி கேட்டார். பக்திசாரரான திருமழிசை ஆழ்வாரும்,
"அக்கரங் களக்கரங்களென்று மாவ தென் கொலோ  
இக்குறும்பை நீக்கிஎன்னை ஈசனாக்க வல்லையேல்
சக்கரங் கொள் கையனே சடங்கர் வாயடங்கிட
உட்கிடந்த வண்ணமே புறம் பொசிந்து காட்டிடே"
என்று பெருமாளை வேண்டி பாட, ஆழ்வார் உடம்பிலேயே திருப்பாற்கடலில் பள்ளி கொண்ட கோலத்தில், தனது தேவிமார்களுடன், திருமால் காட்சி தந்தனன். மறுத்துப் பேசியவர்களும் ஏளனம் செய்தவர்களும் இக்காட்சியை கண்டு மனம் தெளிந்து திருந்தி ஆழ்வாரின் அடி பணிந்து வணங்கி அடியவர்கள் ஆயினர். 
 
ஜீவ சமாதி:
சிறிது காலத்திற்கு பின் கும்பகோணம் (திருக்குடந்தையை ) அடைந்து பெருமாளை சேவித்து வணங்கினார். பெருமாளை வேண்டி, "நடந்த கால்கள் நொந்தனவோ, கிடந்தவாறேழுந்து பேசு" என்று பாட சிலையுருவின் வரம்பு கடந்து அப்பெருமாள் எழ அப்பெருமாளின் எழிலுக்கு தீங்கு நேரா வண்ணம் "ஆழ்வார் வாழிகேசனே" என்று பாடி முடித்து மங்களாசாசனம் செய்து வைத்தார். அப்போழுதிருந்த படியே அப்பெருமானும் அப்படியே எழுந்தவண்ணம் நிலைத்து அருள் வழங்கி வருகின்றார். திருமழிசைப்பிரான்  ஆழ்வாரும் நாலாயிரத்தேழு நூற்றாண்டுகள் பக்தியையும், ஞானத்தையும் வளர்த்து வைணவத்தை பரப்பி வாழ்ந்து கும்பகோணத்திலேயே ஜீவசாமாதி ஆகி மறைந்தார். இவருடைய ஜீவ சாமாதி கும்பகோணத்தில் கும்பேஸ்வரன் கோயிலுக்கு அருகில் உள்ள சாத்தார தெருவில் இருக்கின்றது.   

சித்தர் சிவவாக்கியர் & திருமழிசையாழ்வார்:(இருவரும் ஒன்றே-அரியும், சிவனும் ஒன்றே!!! )
இவர் சித்தராக இருந்தபோது இயற்றி பாடிய நூல் சிவவாக்கியம். இவர் சித்தராக maara குருவாக வந்தது ஸ்ரீ விஷ்ணுவே என்பதை உணர்ந்துகொண்டு அக்குரு சேவைக்காக ஈசன் ஆணையின் வண்ணம் திருமழிசை ஆழ்வாராக அவதரித்தார். "இறைவன் புத்தியைத் தருவான் ஆனால் பக்தியைத் தாரான்", என்ற வேத வாக்கியத்தை உணர்ந்து பக்தியை முழுவதும் அனுபவித்து தானே உணரவும் பக்தியை பரப்பவும் பக்திசாராராக ஞானம் வளர்ந்தார். திருமழிசை ஆழ்வாராக வைராக்கிய பக்தியை கடைப்பிடித்து வாழ்ந்து திருமாலின் அருளால் நான்முகன் அந்தாதி, திருச்சந்த விருத்தம் என்ற நூல்களை இயற்றினார், எண்ணற்ற சித்தாடல்களை செய்து காட்டினார்.

ஆழ்வாரின் பாடல்கள் வைணவர்களின் தோத்திர நூலாகிய நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் சேர்க்கப் பட்டுள்ளது, ஆனால் சிவத்தையும், பஞ்சாட்சரத்தையும் சிவாயமாக்கி சிவவாக்கியர் பாடிய "சிவவாக்கியம்" இவரை நாத்திகராக விமர்சித்த சிலரின் திட்டமிட்ட சதியால் சைவத்தின் திருமறையில் சேர்க்கப்படாது நிராகரிக்கப்பட்டு இச்சித்தரின் பாடல் இடம்பெறாமல் போனது. 

"சிவவாக்கியம்" என்ற தலைப்பின் கீழ்  இச்சித்தரின் 550 பாடல்களும் விளக்கங்களும் பதிவு செய்யப்படும் என்பதனை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கின்றேன்...அன்புடன் கே எம் தர்மா..   

 

http://keyemdharmalingam.blogspot.com

  • All
  • 1
  • 2
  • 3
  • 4